பக்கம்:நற்றிணை-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 285 வைத்தாற்போன்ற நறுமணம் ஒருங்கே கமழ்வதான, அழகிய நிறங்கொண்ட நீலமணிபோலும் ஐந்து பகுதியாக முடித்தற் குரிய, சரிந்து வீழும் வண்டுகள் மெல்லென ஒலித்தலேயுடைய நறுமணமிகுந்த தலைவியரின் கூந்தலினது, அரிதாகப் பெறுதற் குரிய பெரும் பயனைக் கொள்ளாதவராய், அவரைப் பிரிந்து வாழ்கின்ற பகுதியையுடைய பொருளீட்டி வாழ்கின்ற ஆடவர்கள், உலகம் படைத்த காலத்திலிருந்தே, அடைந் தாரைப் பேணிக்காக்கும் அருள்நெறியை மறந்தனரோ அத் தகையவர் சிறந்த தகுதிப்பாட்டினை உடையவரேயாம் என்ப தாம். . - கருத்து அடையாரைக் கைவிடாது பேணுதலே சிறந்த அறநெறி என்பதாம். + சொற்பொருள் : சிறந்திசினுேர் - சிறந்த தகுதிகளை உடை யோர். முதிரா வேனில் - முற்ருத இளவேனில். எதிரிய - எதிர்நோக்கிய எதிர்ப்பட்ட எனினும் ஆம், அதிரல் மலர்வது இளவேனிலில் என்பதால், பராரை - பருத்த அடிமரம். நறுமோரோடம் - செங்கருங்காலி. அடைச்சிய - அடைத்து வைத்த, செப்பு - பூவைக்கும் செப்பு. அணி - அழகு. தளர் தல் - சரிந்து வீழ்தல். பையென முழங்கும் மெல்லென ஒலிக்கும் என்றது, வண்டினம் மொய்த்து ஆரவாரித்தலை. விளக்கம் : உலகம் படைத்த காலை மறந் த ன ர் கொல்லோ என்றது, உலகியல் வகுத்த சான்ருேர் அன்றே மறந்துவிட்டனர் போலும், அதல்ை ஆடவர் மனைவியரை அவர் வருந்தி நலியத் தனித்து வைத்துப் பிரிதலும் அறமாயிற்று என்று ஆடவர் பொதுவியல்பைச் சுட்டி நொந்து உரைப்பதாம். காட்டு மல்லிகை, பாதிரி, செங்கருங்காலிப் பூக்களை ஒன்முகச் செறித்து வைத்து, அச் செப்பினின்று வெளிவரும் இனிய கூட்டுமணத்தை நுகர்ந்து, இன்புறுதல் இங்கே கூறப் பட்டுள்ளது. இத்தகைய நறுநாற்றம் உடையது தலைவியின் கூந்தல் என்றது, அவளது செவ்வியைக் கூறி, அவளையும் பிரிதற்கு நினைத்த தலைவனின் மனப் போக்கிற்கு நொந்ததாம். "சிறந்திசினேர் என்றது எள்ளற் குறிப்பு: அங்ங்ணம் வகுத் தவர் சிறந்தவர் ஆகார் என்று சொன்னதாம். பயன் தலைவியைப் பிரிதலால் அவளுக்கு உண்டாகும் துயரமிகுதியை உணர்கின்ற தலைவன், தன் பொருளார் வத்தைச் சிறிது ஒதுக்கிவிட்டு, அவளோடு தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/289&oldid=774325" இலிருந்து மீள்விக்கப்பட்டது