பக்கம்:நற்றிணை-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,13 多 كادته நற்றிணை தெளிவுரை ((து - வி) களவுக் காலத்தே, தலைமகன் வந்து ஒருபக்க மாகச் செவ்வி நோக்கி ஒதுங்கி நிற்பதைத் தோழி கண்டாள். அவன் மனத்தைத் திருமணத்திற்குத் தூண்டக் கருதியவள். தலைவிக்குச்சொல்வாள்போல், அவ்னும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) " தோலாக் காதலர் துறந்துகம் அருளார்; 'அலர்வது அன்று கொல் இது? என்று கன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை-சிறந்த 5 சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் ஒள்நுதல் பெதும்பை நல்நலம் பெlஇ, மின்நேர் ஓதி இவளொடும், நாளைப் பன்மலர் களுலிய வெறிகமழ் வேலித் 10 தெண்ணீர் மணிச்சுனை ஆடின், என்னே மகளிர்தம் பண்பென் ருேளே! தெளிவுரை : தோழி! அன்னையானவள், சிறந்த சீர்கள் எல்லாம் நிரம்பிய நம்முடைய அகன்ற மாளிகையின் கண்ணே என்னருகே வந்தனள்; என்னையும் அன்போடு தழுவிக் கொண் டனள். நீராலே அலைக்கப்பட்டுக் கலைந்த மாலையையுடைய ஒள்ளிய நுதலையுடைய பெதும்பைப் பருவத்தாளாகிய இவள் தான், நல்ல அழகினைப் பெறுதலின் பொருட்டாக, மின்னலைப் போன்று இடைவகிடு பெற்ற கூந்தலையுடைய இவளோடும், நாளைப் பகற்போதில், பலவகையான மலர்களும் விளங்கி மணம் கமழும் வேலியையுடையதான, தெளிந்த நீரினைக் கொண்ட அழகிய சுனையிலே சென்று நீராடினல், மகளிர்களது உடலின் வனப்பெல்லாம் எப்படியாகுமோ?' என்றும் கேட்டனளே! ஆதலினலே, பகையிடத்துத் தோல்வியே காணுத நம் காதலர், நம்மைக் கைவிட்டவராக, நமக்கு அருள் செய்யாராயினர்; இதுதான் ஊரெல்லாம் அலராவதற்கு உரியதொன்று ஆகுமல்லவோ?’ என்று, நன்மையேதும் தோன்ருத வாடிய நெஞ்சத்துடனே, புதியபுதிய எண்ணங் களையே பேசிக்கொண்டு, நாம் இருவரும் நீந்திக் கரைசேராது தவிக்கும் துன்ப வெள்ளத்தினை, நம் அன்னையும் அறிந்தாள் போலும்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/292&oldid=774331" இலிருந்து மீள்விக்கப்பட்டது