பக்கம்:நற்றிணை-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಹbಹಿಣ' தெளிவுரை - 291 சொற்பொருள்: புல்லேன் - தழுவேன். புலத்தல் - ஊடல். கல்லா - கற்றறிவு இல்லாத. கல்லா யானை- வலிமிகுந்த இளங் களிறு. கடுந்தேர் - விரையச் செல்லும் தேர். செழியன் - பாண் டியன். கால் - கால்வாய். கணக்கோட்டு வாளை - திரண்ட கொம்புடைய வாளை மீன்; கொம்பு தலையின் இருபுறத்துமுள்ள கூரிய முட்களைக் குறிக்கும். அள்ளல் - ச்ேறு. பகடு - எருமைக் கடா. புள்ளிவெண்புறம் - சேற்றுப்புள்ளி காய்ந்து வெண்மை யாகத் தோன்றும் உழவனின் உடற்புறம். சால் - உழவு சால். புடை மதரி - புடைத்தற்கும் அஞ்சாமல். பைங்கால் - பசுமை யான நீர்வளம். அணை - வரம்பு. சிறுகுடி - ஓர் ஊர். கோள் 露 - கொள்ளுதல் அமைந்த தன்மையுடைய இறுகப் பிடித் ருநத. உள்ளுறை : குளத்திலிருந்து மடைநீரோடு வெளியேறிச் சென்ற வாளை மீனனது, கால்வாய் வழியாகச் சென்று, வயலுள் ஓடி, உழவர் புடைத்தற்கும் அஞ்சாமல், வரப்படியிலே சென்று புரளும் என்றனர். இவ்வாறே மனையகம் நீங்கிய தலைவன், பாணன் காட்டிய வழியே பற்றிச்சென்று, பரத்தையர் சேரியுட் புகுந்து, பிறர் பழியுரைக்கும் அஞ்ச்ாதவகை, ஒருத்தியின் வீட்டினுட் சென்று, அவளோடு இன்பம் துய்த்துக் கிடந்தவ வைான் என்பதாம். . விளக்கம் : செழியன் படை மாண் பெருங்குளம் . செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம் எனினும் பொருந்தும். எதிரிய - எதிர்த்து நீந்தி வந்த நீர் வரத்தில் எதிர் ஏறி வருதல் இது. பக்டு ச்ேறு உதைத்த புள்ளி வெண் புறத்து' என்பது, வயலுள் உழுங் காலத்தே பகடுகள் சேற்றுக்காலால் உதைக்கவும், மேலெல்லாம் புள்ளிபட்டுக் காய்ந்த வெண்ணிறமான முதுகுப்புறத்தைப் பெற்ற உழவர் என, உழவரின் தன்மை கூறினர். இது சேற்று உழவு. கடுந் தேர்ச் செழியன்-பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்தது. வாணன் - வாணன் மரபினன். சிறுகுடி - காவிரியின் வடபால் உள்ளதொரு ஊர் என்பர்; இதல்ை, அந்நாளில் செழியனுக்கு அப்பகுதி உட்பட்டிருந்தது எனலாம். கணவனின் குறையைப் பாராட்டாது பொறுத்து ஏற்கும் மனைவியின் மாண்பு இதற்ை புலகுைம். பெருங்குளம் விட்டகன்ற வாளை வயல் வரப்படி யில் புரளுதல் போல, அவனும் ம்னையகம் விட்டுச்சென்று பரத்தையில்லில் துயின்றனன் என்று கூறி, அவன் சிறுமைக்கு மனம் நொந்ததும் ஆம். * فير "r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/295&oldid=774337" இலிருந்து மீள்விக்கப்பட்டது