பக்கம்:நற்றிணை-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ഈ ൽmുകوله له لديه كـ நற்றிணை தெளிவுரை قيد بی يمه دمه ووو : பாடபேதம் : பெயர்மாண் பெருங்குளம். பயன் : ஊடல் நீங்கிக் கூடி மகிழ்தலைத் தலைவி மேற் கொள்வாள் என்பதாம். 341. துணையிலேம் யாமே! பாடியவர் : மதுரை மருதனிளநாகனர். திணை : குறிஞ்சி. துறை : வினை.வயிற் பிரிந்து ஆற்ருளுகிய தலைமகன் சொல் லியது. ((து - வி.) வேந்துவினை முடித்தற்குப் போர்முனை சென்ற லேவன், வாடைக்காலத்தில் காதலியைப் பிரிந்துறையும் பிரிவின் வெம்மை தாங்காதவகைத் தனக்குள் சொல்லி வருந்து வதாக அமைந்த செய்யுள் இது.) வங்கா வரிப்பறைச் சிறுபாடு முனையின், செம்பொறி அரக்கின் வட்டு கா வடிக்கும் விளையாடு இன்நகை அழுங்கா, பால்மடுத்து, அலையா, உலவை ஒச்சிச் சில கிளையாக் குன்றக் குறவனெடு குறுநொடி பயிற்றும் 5 துணை நன்கு உடையள், மடந்தை, யாமே வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென. நீர் இரங்கு அரைநாள் மயங்கிக் கூதிரொடு வேறுபுல வாடை அலைப்பத் துணையிலேம், தமியேம், பாசறை யேமே! 10 தெளிவுரை: வெள்ளியாலே செய்யப்பெற்ற, வரிகளை யுடைய பறையினை அடித்துச் சிறிதுபொழுது விளையாடியபின், அது தானும் வெறுத்ததானல், சிவந்த புள்ளிகொண்ட அரக் கினது வட்டுப்போன்ற நாவாலே வடித்து இறக்கப்படும் விளை யாட்டின் இனிய களிப்பானது நீங்கப்பெருதபடி பாலினையும் சென்று பருகுவான். அதன்பின், அங்குமிங்குமாகச் சுற்றியலைந் தும், சிறு-குச்சியைக் கைக்கொண்டு ஓங்கிக் காட்டிப் பிறரை அச்சுறுத்தியும், இடையிடையே சிலசில சொற்களைப் பேசியும் விளையாடுவான், குன்றத்துக் குறவனகிய எம் மகன். அம் மகனேடு, சிறிய நொடி பயிற்றியபடியாகப் பிரிவை மறந் திருக்கும் துணைமையின, நல்லபடியே அவள்தானும் பெற்றிருக் கின்ருள். ஆனால், யாமோ.- .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/296&oldid=774339" இலிருந்து மீள்விக்கப்பட்டது