பக்கம்:நற்றிணை-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 293 கொடிய பகைவர் நாட்டிலேயுள்ள போர்முனையிடத்தே குளிர்ந்த மழையானது பெய்ததாக், மழை நீர் அருவியாக வீழ்ந்தபடியேயிருக்கும் ஒலிப்ானது கேட்ட்படியிருக்கின்ற இரவின் நடுயாமப் பொழுதிலே, கூதிரோடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடையான்து வந்து வருத்துதலாலே மனம் மயங்கி, அதனை நீக்குதற்குத் துணையாவார் யாரும் இல்லாதே மாய், தமியேமாய், பாசறையிலேயே உள்ளோம்! கருத்து : 'என் பிரிவால் அவளும் நலிந்தாலும் மகனைத் துணையாகப் பெற்றுளதால் ஆறுதல் பெறலாம், எனக்கோ யாரும் துணையில்லை' என்பதாம். - - சொற்பொருள் : வங்கா வரிப்பு அறை எனப் பாடம் கொண்டு, வெள்ளிபோன்ற வெண்கோடுக்ள் அமைந்துள்ள கற்பாறையிலே சென்று, அதன்பால் வீழும் அருவி நீரிலே எனவும் உரைகொள்வர். சிறுபாடு முணையின் - சிறிதளவு வெறுப்படைந்தால். செம்பொறி அரக்கின் வட்டு நா - சிவந்த புள்ளிகளையுடைய அரக்கின் வட்டம்போன்று விளங்கும் நாக்கு. நாவடிக்கும் பால் மடுத்து - நாவாலே சுவைத்துக் குடிக்கும் தாய்ப்பாலைப் பருகி. விளையாடு இன் நதை - விளை யாட்டிலே பெறுகின்ற இனிய மகிழ்ச்சி. குன்றக் குறவன் என்றது, தன் குடிக்குத் தலைவகைப் பிறந்த தன் மகனை. நீர் இரங்கு - நீர் ஒலிக்கும். அர்ைநாள் - இர்வின் நடு யாமப் பொழுது. விளக்கம் : குன்றக் குறவனெடு என்பதற்கு வேறு குறவன் எனப் பொருள்கொள்வது, தலைவிக்கு ஏற்காததாத லின், தலைவன் அவ்வாறு நினைப்பது பொருந்தாததாதலின் ஏற்புடைத்தாகாது என்க. "மகனவது அவளுக்குத் துணையாக உள்ளனன்' என எண்ணுவதே பொருந்தும் என்க. கார்காலத் தில் மீள்வேன் என் உறுதிகூறிப் பிரிந்து வந்தவன், கூதிர் காலமும் வந்து, மழையும் வாடையும் வருத்தத் தன் ஆசை மனைவியை நினைத்து இவ்வாறு புலம்புகின்ருன் என்பதே சிறப்பாகும். வேறுபுல வாடை அலைப்ப' என்றது, வேற்றுப் புலத்து வாடை வருத்த என்று பொருள்பட்டு, அவன் தன் நாட்டிலிருப் பின் வாடை வருத்தாது அவள் அணைப்பிலே கிடப்பன் என்ப தையும் உணர்த்துவதாம். இது பாசறைப் புலம்பல். | f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/297&oldid=774341" இலிருந்து மீள்விக்கப்பட்டது