பக்கம்:நற்றிணை-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை . 295 Ur€T–ri೧ುಹಿT! யாத்த கானல் வண்டுண் நறுவி நுண்ணிதின் வரித்த சென்னிச் சேவடி சேர்த்தின், என்னெனப் படுமோ? என்றலும் உண்டே 10 தெளிவுரை "அன்பினை உடையவளே! பனங்கருக்குக் குதிரையினைத் தான் உவந்து ஏறுதற்குரிய குதிரையெனக் கருதி மடலூர்ந்து வந்தான்; அவ்விடத்தே இதுவோர் காவற் கோட்டை மதிலேபோலும் என்று வெளிதான பேய்த்தேரினைச் சென்றும் மோதிப் பார்த்தான்; இப்படி வருந்துகின்றவருக்கு என் வாயாலே நின்னுடைய பேச்சு இன்னதுதான் என்று நானே கூறமாட்டேன். நின்னை விரும்பியவராக, நம் சேரியிடத்துக்கு வருதலைக் குறித்தவராக வருகின்ற அவருக்கு, நாம் எப்போதும் அருள்செய்தல் வேண்டும்” என்று, கண்ணினலேயே இனிதாகச். சுழித்துக் குறிப்பாலே பலவாறு உணர்த்திக் காட்டினேன்; தலைவிதான், அது கண்டும். எந்த முடிவையும் எனக்குத் தெரி வித்தாள் அல்லள். யான்தான், இனி, ஒளியுள்ள சங்கினம் ஊர்தலாலே வரிகளையிட்டுள்ள கானற்சோலையிலே, வண்டுகள் உண்ணும் நறுமலர்கள் உதிர்ந்து நுட்பமாக அழகு செய் திருக்கும் அவ்விடத்தே, என் தலையை அவன் சிவந்த அடிகளில்ே சேர்த்துப் பணிந்தால், இதுதான் என்னவோ என்று கேட்கப் படுவேனே என்றவொரு கேள்வியும் உண்டாதல் கூடுமே! யான்தான் இனி என்ன செய்வேனே? கருத்து : ' ക്ലിഖ് நிலை இனி யாதாகுமோ? என்பதாம். சொற்பொருள் : மா - குதிரை. ம ட ல் - பனங்கருக்கு மட்டையாலாகிய குதிரைமேல் ஏறிவருதலான ஒரு செயல். வெண்தேர் - வெளிய பேய்த்தேர். நின் மொழி மாட்டேன் - நின் பேச்ச்ைச் சொல்ல மாட்டேய்ை. சேரா - சேர. கண்கோட்டல் - கண்ணை இடுக் கி க் காட்டி ஒன்றைத் தெரிவிக்க முற்படுதல். எல்வளை - ஒளியுள்ள சங்கினம். யாத்த ஊர்தலாலே கோடிட்டுப் போந்த. கானல் - கடற்கானல் மணலிடம். வீ - மலர். - . விளக்கம் : மாவென ம தி த் து மடலூர்தலை மேற். கொள்ளலும், மதிலென மதித்து வெண்தேர் ஏறலும், அவன், காம நினைவாலே கருத்தழிந்து பித்தாயின நிலையைக் குறிப்ப தாகும். இந்நிலையினகிைய்வன், இனி என்னென்ன அறிவிழந்த செயற்களைச் செய்வானே என்று நினைந்து நொந்ததாம். இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/299&oldid=774345" இலிருந்து மீள்விக்கப்பட்டது