பக்கம்:நற்றிணை-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ل م م ہو ہو A( M وہ M 4 ماڑہ ۓ : اؤه در له يو دى,ل که به په M « . 炉 296 ... 9<rن , cy 66 நற்றிணை தெளிவுரை தன் குறிப்பைத் தலைவி உணராளாயிருந்து விட்டதனை நினைந்து தோழி தனக்குள் கூறிக்கொள்வதாகக் கொள்க. 'என் வாய் நின் மொழி மாட்டேன்' என்றது, தலைவி வேறு பலருடன் சேர்ந்திருந்த காரணத்தால், தலைவனின் குறையை வாயாற் சொல்லமுடியாது போயினேன் என்பதாம். எல்வளை' என்பதைத் தலைவிக்கு ஆக்கி, எல்வளை தேரலள் எனக் கூட்டியும் பெர்ருள்கொள்ளல்ாம். வண்டுண் நறுவி நுண்ணி தின் வரித்த என்றது, அவ்வாறே தலைவல்ை நலனுண்ணப் பட்டுக் கிடக்கும் தலைவியைக் குறிப்பால் உணர்த்துவதும் ஆகும். சென்னி சேவடி சேர்த்தின் என்றது, தான் கொண்ட முயற்சி தோற்றமைக்கு இரங்கி அவனிடம் பொறுத்தருள வேண்டுதல். என்னெனப்படுமோ என்றலும் உண்டேஎன்றது, என்ன தான் தலைவிக்கு நிகழ்ந்ததோவென்று மயங்கித் தான் வீழ்ந்து படுதலான ஒரு நிலைமையும் உளவாக லாமே எனக் கலங்கியதாம். பேய்த்தேர் வெயிலில் நீர்நிலைபோலக் காணப்படும் என்பதைப் பலரும் கூறுவர்; அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ, என்பது அகம் (395). பாடபேதங்கள் : அறலென மதித் து; சேரிற் சேரா; கண்ணினிதாக்க் காட்டியும்; என்னெனப் படுங்கொல். பயன் : தோழியின் இந்த மனத்துயரையும், தலைவனின் நிலையையும் அறிதலுறும் தலைவி, தலைவனுக்கு இசைபவளாகி, அவன் குறைதீர்த்துத் தானும் இன்புறுவாளாவள் என்பதாம். 343. மால் இல்லை கொல்? பாடியவர் : கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனர். திணை : பாலை. துறை : தலைமகள் பிரிவிடை ஆற்ருளாய்ச் சொல் லியது. ((து . வி.) தலைவனைப் பிரிந்து, அந்த நினைவாலே வருந்தி யிருக்கும் தலைவியின் துயரம், மாலைக் காலத்து வரவினலே மேலும் பெரிதாகின்றது. அதனைத் தாங்காத அவள், இம் மாலைப் பொழுது அவர் சென்றுள்ள நாட்டிலேயும் இல்லையோ? அவரும் நம்ம்ை நினையாரோ? என்று நினைந்து துடிப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/300&oldid=774351" இலிருந்து மீள்விக்கப்பட்டது