பக்கம்:நற்றிணை-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 298 நற்றிணை தெளிவுரை ஆலமர் செல்வன் என்று போற்றப் பெறுகிறவன் சிவபிரான்; வழிபடுவார் ஆலடியிற் படையலிட்டுப் போற்றினர் என்க. உகுபலி - இட்ட பலிச்சோறு. புன்கண். துன்பந்தருதலையுடைய. கிளை - இன்ம்; மரக்கிளை எனின், அம் மரத்தின் கிளையிலுள்ள தன் கூட்டிடத்தே என்க: படை - படைக்கலம்; இது வாடைக் காற்றும், முல்லை மணமும், பசுக்கள் வீடுதிரும்பலும் பிறவும் ஆம். கூட்டம் - சேர்க்கை. இறைச்சிப் பொருள் : 1. ஆ. லி ன் கீ ழ் இடப்பெறும் பலியைத் தின்ற காக்கை, தன் சுற்றத்திடம் சென்று மாலையில் தங்கும் என்றது, என் நலனுண்ட பசலையானது நெற்றியிலே சென்று தங்கி நின்றது என்பதாம். - 2. ஆலம்வீழ் ஆவின் புறத் தே வருடுமென்றது, அருகிலிருந்து தோழி தன் துயரை ஆற்றிவருதலைக் குறிப் பிட்டதாம். - விளக்கம் : பலி அருந்திய காக்கை என்றது, பிற மகளிர் தத்தம் காதலர் வந்த மகிழ்ச்சியினலே காக்கைக்குப் பலியிட் டுள்ளனர்; நம்மவர்தான் வந்தாரில்லையே என்பதை நினைத்துக் கூறியதும் ஆம். வீழ்ால், வீடுதிரும்பும் பசுக்களைத் தடவிவிடும் ஆலமரம் என்றது. . அதற்குள்ள அன்பு நெகிழ்ச்சிக்கூடத் தலைவன்பால் இல்லை என்று நினைத்து நொந்ததாம். 'காக்கை கிளைவயிற் செறிய' என்றது, அதற்குள்ள பாசமும் அவர்பால் இல்லையே என்று கூறி வருந்தியதாம். நத்துறந்து அரும்பொருட் கூட்டம் வேண்டி என்பதன் உருக்கம் நினைத்து இன்புறத் தத்கது. 'நம் கூட்டத்தை வெறுத்து, அரும்பொருட் கூட்டத்தை விரும்பினர் என்னும் ஏக்கக் குரல் இது. r பாடபேதங்கள் : தொகுகருங்காக்கை; சினை.வயிற் செறியர்; அரும்பொருள் ஈட்டம் வேண்டி. - பயன் : வேதனை மிகுதியால் வெதும்பும் உள்ளமானது, இவ்வாறு தன்னிலை புறம்தோன்ற வாய்விட்டுக் கூறுதலாலே சிறிதளவுக்கு அமைதி பெறும் என்பதாம். 344. செந்தினை உணங்கல்! பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர். திணை : குறிஞ்சி. துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகள் கேட்பச் சொல்லியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/302&oldid=774356" இலிருந்து மீள்விக்கப்பட்டது