பக்கம்:நற்றிணை-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நற்றிணை தெளிவுரை கிடக்கும், அரிய போர்முனையை அடுத்துள்ள வழியிலே, வேலி யழிந்து போய்க் கிடக்கும் முன் அழகியதாயிருந்த குடிகளை யுடைய சிற்றுாரினிடத்தே, ஆள் வழக்கற்றுப்போன ஊர்ப் பொது மன்றத்திலே, அசையும் காற்ற்னது ஆட்டி அசைத்துக் கொண்டிருக்க, வீரத்தன்மை கொண்ட் வன்மையமைந்த பாடி இருக்கையிலே, இன்றைக்கு, எக்காலத்தும் நிறைவோடு பொருந்தி. விளங்கும் மதியத்தைப்போல விளங்குகின்ற பொறையனது. மிகத் தண்மைகொண்ட கொல்லிமலையிடத்திலேயுள்ள, சிறிய பசிய மலைப்பச்சையினைச் சூடுதலாலே, மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடையவளும், இளைய அழகிய மடந்தையு மாகிய அவளின், வளைந்த மென்ன்மயான தோள்க்ளை, நீதான் தழுவுதற்கு விரும்பினய் போலும் என்பதாம். கருத்து. ‘என்றைக்கு அவளைத் தழுவும் இன்பத்தை அடைவோமோ?' என்பதாம். சொற்பொருள் : குணகடல் - கீழ்கடல்; இந்நாளைய வங்கக் கடல். குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி என்றதால், இது வடகிழக்குப் பருவக் காற்று என்க. தலைஇய - பெய்து விட்ட நிலம் தணி காலை - நிலம் வெம்மை தணிந்து குளிர்ந்து விட்ட காலம்; இது வாடைக் காலம். தாள்வலி - முயற்சியின் வலிமை. வன்கண் இருக்கை - வன்கண்மை தரும் இருக்கையும் ஆம்; அது பாசறை இருக்கை. நிறையுறு மதி - முழுநிலவு. பொறையன் - பாண்டியன்; குளவி - மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறுவர். கடிபதம் - மணத்தின் தன்மை. விளக்கம் : அவன் மீள்வதாகச் சொல்லி வந்த கார்கால மும் கழிந்து, வாடைக்காலமும் வந்தது. அவனே பகையழித்து வென்று, பாழுர் மன்றிலே அமைந்த பாசறை இருக்கையிலே உள்ளனன். இரவின் அமைதியில், வானத்து முழுநிலவு அவன் வேதனையை மிகுவிக்கிறது. வினை முடிந்ததாதலின், ஊர் திரும்பும் நினைவு மேலெழுகின்றது. அரசாணையை எதிர்பார்த் திருக்கும் அவன் நினைவிலே, அவன் காதலி நிற்கின்ருள். கார் காலம் கழிந்ததாதலின், அக்காலத்தே செழித்திருக்கும் பச்சையை, அவள் தன் கூந்தலுக்குச் சூடுவதும் அவன் நினை விலே வந்து நிழலிடுகின்றது. நக்கன மன் போலா என்றது. அன்று திண்மையோடு பிரிந்துவரத் துணைசெய்த மனம், இன்று நெகிழ்ந்து அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/308&oldid=774368" இலிருந்து மீள்விக்கப்பட்டது