பக்கம்:நற்றிணை-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 நற்றிணை தெளிவுரை நீரினை முகந்த, நிறைந்த சூலையுடைய கருமேகங்கள், அகன்ற திசையிட்ம் எல்லாம் மறையும்படியாக வானிலே எழுந்து பரவும்; உயர்ந்த மலையிடம் எல்லாம் ஒளிரும்படியாக மின்னலைச் செய்து வருத்தும்; பாம்புகள் தலைதெறித்து இறந்து வீழுமாறு இடிகளை முழக்கும்; வானத்தே புகுவதுபோல உய்ர்ந்த முடிகளைக் கெர்ண்ட் குன்றங்களைச் சூழ்ந்து வளைத்துக் கொள்ளும்; கொண்டு, மிகுதியான மழையினையும் பெய்யத் தலைப்பட்ட பொழுதிலே, புலையன், அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணிடத்தே மோதுதலால் எழுகின்ற.ஒசை போல் அருவியும் ஒலியோடு வீழுகின்ற பெரிய மலைநாட்டவன் நம் தலைவன். அவன், இன்ன நிலையினன்; பேரன்பினை உடை யவன்' எனப், பலவாருக அவன் சிறப்புக்களை எல்லாம் கூறும் பரிசிலர்களுடைய பெரிய பேச்சுக்களை யான் காணவும் கேட்க வும் உயிரோடிருக்க, விதிதான் என்னையும் நெடுநாள் இனியும் விட்டு வைக்குமோ? என்பதாம். - கருத்து : "அவர் மனங்கனிந்து வந்து மணம் செய்து கொள்ளும் வரைக்கும் யான் உயிரோடு இரேன் என்பதாம். சொற்பொருள் : கமஞ்சூல் - நிறைந்த சூ லை யு ைட ய. மாமழை - கார்மேகம். மாதிரம் - திசை. நனந்தலை - அகன்ற இடம். புதைய - மறைந்து போய்ப் புலப்பட்ாது போக். மிளிர - ஒளிசெய்ய, தெறித்து வீழ என்றும் ஆம். வான் புகுதலைய - வானிற் புகுவது போன்ற உயர்ந்த முடிகளைக் கொண்ட அழிதுளி - சிதைந்த துளிகளும் ஆம். புலையன் - தண்ணுமை கொட்டுவோன். பேழ்வாய் - அகன்ற வாய். இடம் - கண்ணிடம். தொடுதல் - அடித்தல். பெருவரை - பெரு மலை. நெடுமொழி - பெரும்பேச்சு வாழ்த்திப் பாடுதலும் ஆம். தேரை - தவளை வகை. இறைச்சி : மலையிலே மழைபெய்த காலத்திலே, புல்ையன் அடிக்கும் தண்ணுமையின் ஒலிபோல அருவி வீழும் என்றனர்; இது தலைவன் வந்து தலையளி செய்து திரும்பியதும் எங்கும் அலர் எழுந்து ஒலிக்கும் என்றதாம்.' விளக்கம் : மழை பெய்து அருவியும் ஒலியோடு வீழ்தலைக் குறிப்பிட்டுக் கூறியது. கார்காலம் வந்து கழிந்தபின்னும், அவன் மனம் வரைந்து மணந்து கொள்வதிற் செல்லவில்லை என்று வருந்திக் கூறியதாம். எங்கும் குளிர்ச்சி பரவியபோதும் தன்னுளத்து வெம்மை மாறிற்றில்லை என்றதும் ஆம். வேனில் தேரையின் அளிய என் நலன் என்றது. வேனிற் காலத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/310&oldid=774374" இலிருந்து மீள்விக்கப்பட்டது