பக்கம்:நற்றிணை-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 . நற்றிணை தெளிவுரை தெளிவுரை : விரையச் செல்லும் தேரிலே ஏறிச் ੰ தேரைத் தொலைவிலே நிறுத்திவிட்டுக் காலால் நடந்தும் சென்றேன். வளைந்த கழியின் அருகிலேயுள்ள அடும் பின் மலர்களைக் கொய்து தந்தேன். தாழையின் மலரைப் பறிக்குமாறு அவளைத் தூக்கியும் உதவினேன். நெய்தல் தழை யையும் மலரையும் தொய்து தந்தேன். இவ்வாறெல்லாம் செய்து, அவளைச் சேர்ந்தது போலவே கருதிய உள்ளம் உடையவனனேன். அந்நினைவோடு நாள்தோறும் இத் தன்மைய கைவே ஆயினேன். இருந்தும்- . செய்யதான தாரினையும் பசுமையான பூண்களையும் அணிந்த வேந்தர்கள் பட்டு வீழ்ந்த பாசறையின்கண்ண்ே, வேல்கள் ஒளிசெய்த வண்ணமிருந்த படைக்கட்லிலே, பகைக் களிறு பட்டு வீழும்படியாக ஆண்மையோடு போரிட்ட்ரின் ஒருவன், அவன், அப்போது பெரும் புண்ணையும் களத்திலே பெற்ருன். அவனைப் பேணிக் காப்பார் எவரும் இல்லாமை யூால், பேய் ஒன்று வந்து காத்து நின்றது. அதுப்ோல, இத் தோழியின் பின்னகவே நின்று, இவள் தெளிவட்ையும் வரையும் வெறுப்படையாமலிருக்கின்ருேம் நாம். நம்மிடத்தே, நம் காதலியாகிய பரதவர் மகள்தான் என்னென்னவ்ெல்லாம் நினைவாளோ? - . - கருத்து: "இவளும் உதவ முன்வந்திலன்; அவள்தான் என்ன நினைப்பாளோ? என்பதாம். . சொற்பொருள் : கடுந்தேர் - கடிதாகச் செல்லும் Ꮾó ಹಿ.ಗಿರಿ தேர் தேர் ஏறிச் சென்ற்து ேேம் உயர்குடியைச் சொல்லியதாம். காலிற் சென்று . நடந்து சென்று காற்ருலே செலுத்தப்படும் கலத்தினர் செலுத்திக் கடல்வழியே சென்று என்வும் கொள்ளலாம். கைதை . தாழை, தூக்கியும் கொய்யுமாறு அவளைத் தூக்கியும், அவளைக் கரையிலிருந்து எட் டி ப் பறிக்குமாறு. தர்ன் தாளையை மேலாகத் தூக்கியும் என்ற்லும் பொருந்தும். புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சம்-புணர்ந்ததேபோல, இச்சிறு சிறு உதவிகளைச் செய்ததனலேயே களிப்புற்ற நெஞ்சம். அழுவம் - படைப் பெருக்கம். பின் நிலை - பின்ன்ேய்ாக இரந்து நிற்றல். முனியா - வெறுக்காத - விளக்கும் புண்பட்டுக் - கிடக்கும் வீரனைக் காப்பா: இல்லாத போதில், பேயும் இரங்கி வ்ந்து காத்து நிற்குமே? இங்கோ, இத் தோழி புண்பட்டு நலியும் எனக்கு உதவி செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/314&oldid=774382" இலிருந்து மீள்விக்கப்பட்டது