பக்கம்:நற்றிணை-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 هر رم ده بر ويه وچ حا moز நற்றிணை தெளிவுரை o y mo . - - T - அன்பில்லையாயினும், அயலார் உரைக்கும் பழிக்கு அஞ்சியே, நீயும் இங்கு வந்தனையாதலின், என் உள்ளம் நின்னை ஏற்காமல் வெறுத்தே ஒதுக்கும் என்பதாம். - விளக்கம் : 'வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை’ பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்' என்று அகநானூற் றுள்ளும் (204) வரும். கவவு என்பது அகத்திடுதல் என்னும் பொருளது; கவவுக்கை-என்பது தன்னோடு உடல் இறுகக்கட்டித் தழுவும் கிையணைப்பு என்று கொள்க. 'என் தொல் நலனும் தொலையினும் தொலைக'.என்றது, நின் செயலாலே தொலைந்து போயின. அதுதான், இனிமேலும் தொலைவதானலும் தொலை வதாக என்பதாம். நெல்லரிவோர் தண்ணுமை கொட்டுவது, கழனியிடத்துள்ள பறவையினம் அகல்வதற்கும்; அரிவோர் திரள்வதற்குமாம். - - பாடபேதங்கள் : கலங் கொளிஇயற்று: கலம்கழியற்று: ஆசில்கலம் தழிஇயற்று. - - பயன் : அவன் வலிந்துபற்றிக் கைவளைத்து இறுகத் தழுவினல், அப்பிடியை விலக்கி ஒதுக்க முடியாதவள் தான் என்று கூறுதலால், வெறுப்பினிடையிலும் அவள்பால் குடிப்பண் பின் உயர்ச்சி உள்ளத்தில் இழையோடுவதனை அறியலாம். ஆகவே, ஊடிப் பிணங்கினலும், முடிவில் இசைந்து கூடுதலே பயனென்று கொள்ளலாம். - . 351. புனம் காப்பின் நலன் பெறுவள்! பாடியவர் : மதுரைக் கண்ணத்தனர். திணை : குறிஞ்சி. துறை : தோழி அருகடுத்தது. ((து - வி) களவுக்காலத்தே தலைவன் இடையிடையே வராதுபோகத் தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அதல்ை, அவள் உடலின் வனப்பும் குன்றுகின்றது. உடல் மாற்றங் கண்ட தாய், முருகு அணங்கிற்றுப் போலும் என்று கருதி, வெறியயர் ஏற்பாடு செய்கின்ருள். அதற்கு அஞ்சிய தோழி, புனங் காவ்லுக்கு இவள் சென்ருலே இவள் அழகு மீண்டுவிடும் என்று சொல்வது போல அமைந்த செய்யுள் இது - - ந.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/317&oldid=774388" இலிருந்து மீள்விக்கப்பட்டது