பக்கம்:நற்றிணை-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 நற்றிணை தெளிவுரை மிகுதியாகித் துடிக்கின்றுள். அதன் அறிந்த தல்வியின் தோழி நெஞ்சம் வருந்தித் தல்ைவனிடம், இரவில் வருவதை நிறுத்தி விட்டு, வரைந்துவந்து தலைவியை மணந்துகொண்டு, பிரியா துறையும் இல்லறம் ஆற்றுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) ஆளில் பெண்டிர் தாளின் செய்த நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை - முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்கெழு குறவர் காதல் மடமகள் 5 கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான்தோய் வெற்ப சான்ருேய் அல்லை-எம் காமம் கனிவ தாயினும் யாமத்து அரும்புலி தொலைத்த பெருங்கையான வெஞ்சின உருமின் உரறும் 10 அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. தெளிவுரை : தம்மைப் பேணுதற்கான ஆடவர்களின் துணையற்ற பெண்கள், முயற்சியோடும் செய்த மிகவும் நுண்மை யான பஞ்சுக் குவியல்போல, காற்ருல் அலைக்கப்பட்டுத் தவழும் மேகக் கூட்டங்களைக்கொண்ட உயர்ந்த உச்சிகளையுட்ைய நெடிய மலைப் பகுதியினிடத்திலே, முடம்பட்டு முதிர்ந்து விளங்கும் பலாமரத்தினது குடம்போன்ற பெரும் பழத்தினை, கற்கள் நிரம்பிய குறிஞ்சிக்கு உரியவரான குறவர்களின் அன்பான இளமகள், கருமையான விரல்களைக்கொண்ட மந்திக்கு, வீட்டுக்குவந்த விருந்தினரை உபசரிப்பதுபோல விருப்புடனே அளித்து மகிழ்வாள். அத் தன்மையுடைய வானத்தைத் தழுவுகின்ற வெற்புக்கு உரியவனே! எம்பால் நீ கொண்டிருக்கும் காமமானது கனிவதாக இருந்தாலும், இரவின் நடுயாமப் பொழுதிலே, வலிய புலியைக் கொன்ற பெருங் கையினையுடைய யானையானது கொடிய சினத்தை யுடைய இடியைப் போல முழங்குகின்ற, அச்சமுடைய சிறிதான மலைவழியிலே துணிந்து வருதலினலே, நீதான் சால் பாளன் இல்லைகாண்! கருத்து : இரவு வருவதனைக் கைவிட்டு, இவளை மணந்து, இந்தக் கவலையற்று ஆரா இன்பம் துய்ப்பாயாக’ என்பதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/322&oldid=774404" இலிருந்து மீள்விக்கப்பட்டது