பக்கம்:நற்றிணை-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 323 குலையினிடத்தே முன்பக்கமாகத் தோய்ந்திருக்கும், கொழுமை ய்ான மடலையுட்ைய வாழையிலுள்ள, வாழைப்பூவின் மடலி னுள்ளே கிடைக்கும் அருவிநீர்போல இனிதான நீரினைச் செம் முகத்தையுடைய மந்திய்ான்து வாய்வைத்துப் பருகியபடியிருக் கும் மல்ைநாட்டோனே! முன்னதாக அமர்ந்து நட்புடையாளர் கொடுத்தாரானல், மிக்க நாகரிகத்தை உடையவர்கள்,அவர்கள் தந்தது நஞ்ச்ாகவே இருப்பினும் உண்பார்களே! அழகிய சிலவாய கூந்தலை உடைய்வளான என் தோழியின் தோளிடத்தே துயின்று பெறும் இன்பத்தினை, நீ நெஞ்சிலே இன்பமாகக் கெள்ளாய் என்ருலும், நின் கண்ணுேட்டம் இல்லாது பிறிது யாதொரு பற்றுக்கோடு எதுவும் இல்லாதாள். அவளாதலினலே, அந்த இன்பத்தை, நீ, என்னிடத்தே கண்ணோட்டம் செலுத்தியாவது, அவளுக்கு அளிப்பாயாக. கருத்து அவனை இனியும் காலம் தாழ்க்காது மணந்து கொள்ளல் வேண்டும் என்பதாம். சொற்பொருள் : பூங்கண் மடந்தை - நீலமலர்போலக் கண் களையுடைய மடந்தை; புதல்வனை ஈன்றதன் பெருமையால் கண் தாய்மை நோக்கம் பெற்று மென்மை மிகுதியாயிற்றென்க. முலைவாய் உறுக்கும் கை - குழந்தையை அணைத்து முலையை அதன் வாயிடத்தே எடுத்துச் சேர்த்துப் பாலூட்டும் கை. தீ நீர் - இ னிய நீர். வாழைக்குலையின் முற்பகுதியிலுள்ள பூவிலே காந்தள் மலர் தொட்டபடி இருக்க, அந்தப் பூவிதழ் மட்லிடையேயுள்ள இனிய நீரை வாய் வைத்து அருந்தும் மந்தியானது, தாய் கையால் அணைத்து முலையூட்டப் பருகும் குழந்தைபோலத் தோன்றிற்று. முந்தை இருந்து - முகத் தெதிரே அமர்ந்திருந்து. நட்டோர் - நட்புச் செய்தவர். நனி நாகரிகர் - மிக்க பண்பாளர். விளக்கம் : புதல்வனை ஈன்ற தாயது அன்பைக் கூறியது, அவ்வாறே அவனும் அவளுடன் இல்லறம் பேணி, அவள் மகிழ்தல் கண்டு இன்புற வேண்டும் என்பதற்காம். வாழைப் பூவின் தேனை மந்தி அருந்தி இன்புறும் மலைநாடயிைருந்தும், தமக்கு அருள் செய்து, தலைவியை மணந்து இன்புறும் மனம் பெற்ருனில்லையே என வருந்துகின்றனள். முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் என்ற தொடர்களோடு, பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள் 580) என்னும் குறளையும் ஒப்பிட்டு இன்புறுக, நட்டோர் இயல்பு அதுவாகவும், நினக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/327&oldid=774415" இலிருந்து மீள்விக்கப்பட்டது