பக்கம்:நற்றிணை-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த', ! ਾਂ - இறும்ை δή νύπί 326 | 2. μch நற்றிணை தெளிவுரை காதலியை மீண்டும் முயன்று அடைவோம் என்பான், காதலி உழையளாக...எமக்குமார் வருமே என்றனன். அது தான் நிகழ்தல் உறுதியென்பவன், குணக்குத் தோன்றும் வெள்ளி யைக் குறித்தனன். பயஸ் : இதனைக் கேட்கும் தோழி, தலைவனின் மிகுதியான பேரன்பை அறிந்தவளாக, உடன்போக்கிற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாளாவள் என்பதாம். 357. கெட அறியாதே! பாடியவர் : குறமகள் குறியெயினி. திணை : குறிஞ்சி. துறை : (1) தலைமகன் வரைவு நீடியவிடத்து ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது; (2) மனைமருண்டு வேறுபாடா யினய் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது உமாம். ((து-வி.) : (1) வரைந்து வருதல் குறித்த காலம் கழிந் தும், அவன் வராகை, அதல்ை தலைவிக்கு யாதாகுமோ என்று வருந்தும் தோழிக்குத் தலைவி, தான் அவன் வரும்வரை துயர் பொறுத்து இருப்பதாகக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (2) மனேக்கண் இருந்தபடியே பிரிவாற்ருமையால் வேறு பட்டாய் என்ற தோழிக்கு, அதனை மறுத்துத் தலைவி, தன் உறுதி கூறுவதாக அமைந்தது எனவும் கொள்ளலாம்.) கின் குறிப்பு:எவனே?-தோழி!-என்குறிப்பு என்னெடு நிலையா தாயினும், என்றும் - நெஞ்சு வடுப்படுத்துக் கெடவறி யாதே.-- சேணுறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், பெயலுழந் துலறிப் மணிப்பொறிக் குடுமிப் 5 பீலி மஞ்ஞை ஆலும் சோலை, அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி நீரலைக் கலைஇய கண்ணிச் சாரல் காடைெடு ஆடிய நாளே. 10 தெளிவுரை : தோழி! என்னுடைய நோக்கமானது என்ளுேடு நிலையாக நிலைத்திருக்கமாட்டாதாயினும், என்றைக் கும், நெஞ்சத்தைப் புண்படுத்திக் கெட்டொழிவதனை அறியாத தாயும் இரா நின்றது. கெடுந்தொலைவுக்கு உயர்ந்து தோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/330&oldid=774422" இலிருந்து மீள்விக்கப்பட்டது