பக்கம்:நற்றிணை-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 327 மலையின் பக்கத்திலே மழையிலே நனைந்து சிலிர்த்த நீலமணி போன்ற புள்ளிகளையுடைய குடுமியையும், தோகையையும் உடைய மயில்கள் ஆடியபடியிருக்கும் சோலையிடத்தே, அவ் விடத்துள்ள பாறையிடத்தேயுள்ள அகன்ற வாயைக்கொண்ட பசிய சுனையிலேயுள்ள, மையுண்ட கண்கள்ை ஒப்பான குவளை மலர்களைக் கொய்தபடி அவனுடன் நான் சுனையாடி மகிழ்ந்த போது, அந்நீர் அலைத்தலானே கலைந்துபோன் த்ங்க் கண்ணியையுடைய அச்சாரல் நாடைேடு. ஆடிய அந்த இன்ப மான நாளினே என்றுமே மறக்கமுடியுமோ? நின் க்ருத்துத் தான் யாதோ? கூறுவாயாக, என்பதாம். கருத்து: அவனை மறத்ததற்கு அரிது என்பதாம். சொற்பொருள் : குறிப்பு - நோக்கம், கருத்து. வடுப்படுத் தல் - புண்படுத்தல். சேண்உறத் நெடுந்தொலைவு உயர்ந்து. கவாஅன் - பக்கமலை. பெயல் - மழை. குடுமி - தலைமேலுள்ளது. ஆலும் . ஆடும். அம்கண் - அழகான இடம். அறை. பாறை, உண்கண் - மையுண்ட கண். நீலம் - குவளை. விளக்கம் : சாரல் நாடைேடு மகிழ்ந்து சுனையாடி இன்புற்ற அந்த நினைவை என் நெஞ்சம் என்றும் மறப்பதில்லை யாதலினலே, அந்நினைவையே பற்றிக்கொண்டு, அவர் வரும் வரை அவர்பற்றிய நினைவிேைலய்ே நம்பிக்கையினலேயே உயிர்தரித்திருப்பேன் என்பதாம். நின் குறிப்பு எவனே? என்றது, நீதான் அவன்மேல் யாதும் ஐயுறவு உடையையோ?” என்று அவள் கருத்தை வினவியதாம் என்னேடு நிலையாது ஆயினும் என்றது, அதுதான் அவனையே நினைந்து நினைந்து ஆழ்ந்திருக்கும் என்பதல்ை ஆம். பீலிமஞ்ஞை ஆலும் சோலை’ என்றது, இயற்கையாக எழும் உணர்வுக்கிளர்ச்சியைக் காட்டு தற்காம். உண்கண் ஒப்பின் நீலம்' என்றது. நீலத்தைக் கண்ணுக்கு உவமையாக்கும் மரபை மாற்றிக் கூறியதாம்."நீர் அலைக் கலைஇய கண்ணி- நீர் அலைத்தலால் கலந்த கண்ணி என்றும் நீர் அலையால் கலந்த கண்ணி என்றும் கொள்க. இறைச்சி : மழையால் நனைந்த மயிலானது சோலையிலே ஆடிக் களிக்கும் என்றது, அவனல் தலையளி செய்யப் பெற்ற யான் அந்த இன்பநினைவிலேயே களித்திருப்பேன் என்பதாம். பயன்: தலைமகளின் மனவுறுதியறிந்த தோழியும், தன் கவலையை மறந்தாளாக நிம்மதி பெறுவாள்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/331&oldid=774423" இலிருந்து மீள்விக்கப்பட்டது