பக்கம்:நற்றிணை-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 329 பெருத்த நம் தோள்களும் தளர்ந்தன; அழகான ரேகை களும் வாடிப் போயின; சிறிய மென்மையான மார்பகத்திலும் பசலையானது பெரிதாகப் பரவிற்று; நாம் இந்த நிலையினை முன்பே அடைந்தேமாகவும், என்னைக் கண்டு வெட்கப்பட்டு, "என்றும் பிரியேன்” என்று நின்பால் சொல்லித் தெளிவு செய் தனர் என்ருலும், அங்ங்ணம் அவர் சொல்லிய நாளும் இப்போது பொய்யாயிற்று; அதனலே கணங்களையுடைய கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டுச் சாந்தி செய்து வழிபட்டு, அவரை நீ வருத்தாதிருப்பாயாக என்று வேண்டிச் சென்று பணிந்து, நாமும் வருவேமோ? கருத்து : "அவர் வருகை வேண்டித் தெய்வம் பராவு வோம்' என்பதாம். - - சொற்பொருள்: பெருந்தோள் - பெருத்த தோள்கள்; பெருத்தல் பூரிப்பால் உண்டாகும் வளமை. அவ்வரி - அழகிய ரேகைகள்; கண்களிடத்தே தோன்றும் செவ்வரிகள் என்க. "சிறு மெல் ஆகம் - சிறிதான மென்மைகொண்ட மார்பகம்; இது இளம் பருவம் என்று விளக்கியது. பசப்பு - பசலைநோய். ஊர்தல் - பற்றிப் படர்தல். அ ண ங் க ல் - வ ரு த் த ல். கணம் கெழு கடவுள் கணங்களைக் கொண்ட கடவுள்; நெய்தல் நிலத்துக்கு உரிய தெய்வம் வருணன் ஆதலின் அவனைக் குறிப்பதாகலாம்; நக்கீரர் பாடியதாகவே, பூதகணங்கள் நிறைந்திருக்க விளங்கும் சிவத்தையே குறித்ததாகக் கருதுதலும் சிறப்பாகும். பலிதுர்உய் - பலிப்பொருள்களைத் தூவி: இது கடல் நீரிலே தூவுதல். நாள் இரை - காலை உணவான இரை. பசும்பூண் வழுதி - பசும்பூண் பாண்டியன். மருங்கை மருங் கூர்ப் பட்டினம்; இதனைத் தழும்பன் என்னும் தலைவனுக்கு உரிய ஊணுார்க்கு அப்பாலுள்ளதென்று, பெரும் ப்ெபர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணுரர் உம்பர், விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்’ என அகநானூறு (227) கூறும்; இன்றைய மரக்காணம் என்னும் ஊரே இது என்பர் சிலர். - உள்ளுறை : இழுவின் முடங்கலைச் சிறுவெண் காக்கை யானது நாளிரையாக அருந்தும் என்றது, அவ்வாறே அவளும் தலைவன் வந்துசேரத் தான் தன் துயரந்தீரக் காமநலம் உண்டு களிப்பவளாவள் என்பதாம். . . . . . - விளக்கம் : அணங்கல் ஒம்புமதி வாழிய நீயெனக் கணங் கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் பரவினம் வருவம் சென்மோ ந.--21 • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/333&oldid=774426" இலிருந்து மீள்விக்கப்பட்டது