பக்கம்:நற்றிணை-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற் றிணை ெதளிவுரை 331 அப்படியே வீடு திரும்பியது. அதன் கன்று, தாயின் மேனி வேறுபாட்டைக் கண்டு, அது தன் தாய்தானேவென்று மயங்கி நின்றது. அத்தன்மையுடைய குன்றத்து நாட்டிற்குரியவன் தலைவன். அவன் உடுத்துக்கொள்ளும் தழையைக் கொணர்ந்து தந்துள்ளனன். அவற்றை யாம் உடுத்தோமானல், எவ்வாறு கிடைத்ததெனச் சினந்துகொள்ளும் தாயின் பேச்சுக்கு அஞ்சு வோம். மறுத்து, அவனிடமே கொடுப்பதானுலோ, அதேைல் அவன் படுகின்ற ஆற்ருமைத்துயரத்தை நினைந்து அஞ்சுவோம். இவற்றிடையே, அவன் மலையிடத்தே போரிடுதலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத தெய்வமிருக்கின்ற மலைப் பக்கத்திலேயுள்ள, கொய்தற்கு அருமையான தழையாலே ஆகிய அவைதான், வாடுதல் உடையதாகவும் ஆகலாமோ? என்பதாம். - * . கருத்து : 'தழையுடையை ஏற்று அவனுக்கு உதவுவோம்' என்பதாம். - சொற்பொருள் : சிலம்பு - மலை. சிறு கோடு - சிறிதான கொம்பு. சேதா - சிவப்புநிறப் பசு. அலங்குகுலை - அசையும் பூங்கொத்து. கன்று தாய் மருளும் - கன்ருனது தாயைப் ப்ார்த்து மயங்கும். கேள் - உறவு; தலைவனைக் குறித்தது. கேடு - துன்பம்; ஆற்ருமை. வருடை - வரையாடு, செங்குத் தான மலையினும் விரைந்து சென்றுவரும் திறனுள்ளது. சூர் - சூர்த்தெய்வம். - விளக்கம் : சிவப்புப் பசுவின் மேலே காந்தளின் தாது விழ, அது நிறம் மாறுபட்டு, கன்று மயங்கும் நிலையடையும் என்றதால், காந்தள் செங்காந்தளன்று என்று கொள்க. "உடுப்பின் யாய் அஞ்சுதும்' என்றது, அவன் கொணர்ந்த தழை அம் மலைப்பகுதியில் உள்ளதன்று ஆதலின், தந்தவர் யாவ் ரெனத் தாய் சினந்து கொள்ளுவளாதலின், அதற்கு அஞ்சு வோம் என்றதாம். வருடையும் பாயாச் சூருடை அடுக்கம்' என்றது, வரையாடும் தெய்வமிருப்பதை அறிந்து அஞ்சிச் செல்லாத மலைப்பகுதி என்றதாம். அவ்விடத்த்ேயிருந்து கொய்த கொயற்கரும் தழையாதலால், அதுவும் தெய்வம்ேறிய தழையாக இருந்து, அதனை மறுத்து ஒதுக்கின் கேடுபயக்குமோ என்று கலங்குகின்றனள். இத ன ல் அதனை ஏற்றலே முடிவாதல் அறியலாம். உள்ளுறை : சேதாவானது காந்தள் தாது உகப்பெற்று வரும்போது, அதன் கன்றே இனம் காணுது மயங்கும் என்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/335&oldid=774430" இலிருந்து மீள்விக்கப்பட்டது