பக்கம்:நற்றிணை-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

外战 ماده ۱ و ۲، را صا 334 - நற்றிணை தெளிவுரை இங்கே வந்து விளுகப் பொழுதைக் கழிக்கின்றன என்று பழிப்பாள். உள்ள நின் விழுமம் உவப்பென் என்கின்றனள். உரை இருதுறைகட்கும் பொருந்தும். - - பாடபேதங்கள் : களத்திற்; பாவை; கையிடைக் கவளம்: கூடுமால் மனைமடி துயிலே. பயன் இதனலே தன் குறையுணர்ந்து நாணிய த்லைவன், தலைவிக்கு இதமான பலவும் நயந்து கூறி, அவள் சினந்தணித்துக் கூடி மகிழ்வளிப்பான் என்பதாம். . 361. விருந்தயர் விருப்பினள்! பாடியவர் : மதுரைப் பேராலவாயர். திணை : முல்லை. துறை : வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது. ((துவி): தலைவன் பிரிந்து சென்றவன் குறித்த பருவம் கடந்த பின்னரே வீடு திரும்புகின்ருன். அதனல், தலைவி அவனை மகிழ்ந்து வரவேற்காமல் ஊடிச் சினத்தலும் கூடும் என்று அஞ்சுகிருள் தோழி. அவள் வீட்டுப் பணியாளர் களிடம் சொல்லித் தலைவியும் கேட்டு மனம் திரும்புமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) சிறுவி முல்லப் பெரிதுகமழ் அலரி தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர் விசும்புகடப் பன்ன பொலம்படைக் கலிமாப் படுமழை பொழிந்த தண்ங்றும் புறவின் நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப 5 மாலை மான்ற மணன்மலி வியனகர்த் தந்தன நெடுந்தகை தேரே என்றும் அரும்பட்ர் அகல நீக்கி விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே! தெளிவுரை : சிறிதான மலர்களையுடைய முல்லையது, பெரிதாக மணம் கமழுகின்ற மலரினை நம் தலைவன் தானும் சூடியுள்ளனன்; அவனுடன் வரும் ஏவல் இளைஞரும் சூடி யுள்ளனர். வானத்தையே கடந்தாற் போன்ற விரைவுட்ன் பொன்னல் ஆகிய முகபடாத்தை அணிந்துள்ள செருக்குடைய குதிரைகள், மிகுதியான மழை பொழிந்து தண்ணென்று தரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/338&oldid=774436" இலிருந்து மீள்விக்கப்பட்டது