பக்கம்:நற்றிணை-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P

  1. Y : 6: " "دهب. وهم

к " '6, 28 文 : A நற்றிணை தெளிவுரை ام-س-- 209. உயிரோடு உடன் வாங்கும்! பாடியவர் : நொச்சி நியமங் கிழார். திணை : குறிஞ்சி. துறை : குறை மறுக்கப் பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்ருளுய், நெஞ்சிற்குச் சொல்லுவாய்ைச் சொல்லியது. ((து-வி.) தலைவியை அடைவதற்கு, அவளுடைய உயிர்த் தோழியின் உதவியை நாடுகின்ருன் தலைவன். அவள் உதவ மறுக்கவே, அவன் தலைவிக்கும் தனக்கும் இடையேயுள்ள காதலன்பின் திறத்தைத் தோழிக்கு உணர்த்தியவய்ைத், தான் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல இவ்வாறு கூறுகின்ருன்.) மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் தளிபதம் பெற்ற கானுழு குறவர் சிலவித்து அகல விட்டுடன் பலவிளைந்து இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் மழலையங் குறுமகள் மிழலையங் தீங்குரல் 5 கிளியும் தாம்அறி பவ்வே! எனக்கே படுங்காற் பையுள் தீரும், படாஅது தவிருங் காலை யாயினென் உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே! தெளிவுரை : மலேச்சாரலிடத்திலேயுள்ள தமக்குரிய தோட்டக்கால்களே, மேலும் அகலப்படுத்தி வளைத்து வேலி யிட்டனர். மழை பெய்யும் பதத்தினைப் பெற்றதும், காட்டினை உழுது வாழ்வோரான உழவர்கள் அப்பகுதியை உழுது பண்படுத்திச் சிலவாய விதைகளையும் கலப்பாக வின்தத்தனர். அவை வளர்ந்து ஒரு சேரப் பலவாகவும் விளைந்தன. தலைசாய்ந்த கதிர்களுடனே விளங்கிய தினைப் புன்மாகவும் ஆயிற்று. அவ் வி ட த் தே உள்ளாளான தலைவியது-மழலைச்சொல்லும் மாருத இளமடந்தையது. பேச்சாகிய இனிதான குரலைக் கிளிகளும் கேட்டு அறிந்திருப்பனவே! அத்தகைய இனிதான சொற்கள் என் பொருட்டாகவும், என்னருகே அவள் இருந்தபடியே எழுமானல், என்னுடைய இக் காமநோயும் தீர்ந்து ப்ோகுமே! அங்ங்ணம் மிழற்றப்படாது, அதுதான் விட்டுப் போயின செயலும் நிகழ்வதாயின், என் உயிரோடு, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/34&oldid=774440" இலிருந்து மீள்விக்கப்பட்டது