பக்கம்:நற்றிணை-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நற்றிணை தெளிவுரை நீ ஆற்றுவி எனச் சொல்லியது; 2. கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததுTஉம் ஆம். ((து . வி.) 1. யான்,வருந்தாது தெளிவிப்பேன் என்ருே நீதான் கவலையில்லாமற் போகின்றன? யான் தெளிவிக்கவும் அவள் கவலை தீர்ந்திலது என்ருல், நீதான் வந்து ஆற்றுவிக்க வேண்டும் என்று, பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி தலைவியின் கவலைபற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. 2. தலைமகன் தந்த கையுறையை ஏற்று, அதனைத் தலைவிக்குத் தருவதற்கு இசைந்த தோழி, தலைவனிடத்தே சொல்வதாக அமைந்ததும் ஆம்: *, 'கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் தெண்கடல் நாட்டுச் செல்வேன் யான் என, வியங்கொண் டேகினையாயின், எனயது உம் உறுவினக்கு அசாவா உலவில் கம்மியன் பொறியது பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு 5 வம்மோ-தோழி! மலிநீர்ச் சேர்ப்பபைந்தழை சிதையக் கோதை வாட கன்னர் மாலை நெருகை நின்னெடு சிலவிளங்கு எல்வளை நெகிழ - அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. 10 தெளிவுரை : நீர் மலிந்த கடற்கரை காட்டுத் தலைவனே. உடுத்திருந்த பசுமையான தழையுடைய சிதையவும், அணிந் திருந்த தலைமாலை வாடவும், நேற்றை மாலைப்பொழுதிலே, நின்ளுேடும், நல்லபடியாக, சிலவாகிய ஒளியுள்ள த்ன் கைவளைகள் நெகிழ்ந்தோட, வண்டுகளை ஆட்டி விளையாடிய வளது, காற்சிலம்பானது உடைந்து போயினது. ஆதலினலே, கண்டல் மரங்களை வேலியாகக் கொண்டதும், கழிகளாலே சூழப்பெற்றதுமான கொல்லைகளையுடைய தெளிந்த நல்ல கடல் நாட்டுக்கு யானும் செல்வேன் என்று நீயும் நெறிக்கொண்டு போவாய் ஆயின. ஆயின், எத்துணையளவேனும், தான் செய் தற்குரிய தொழிலைச் செய்தற்கு வருத்தம் அடையாது, கெடுத லில்லாத கம்மியன், பொறியற்றுப் போனதை இணைத்து ஒன்று சேர்த்துச் செப்பஞ் செய்யவேண்டும் அல்லவோ! அதற்குக் கருக்கட்டுவதற்கான மண் எடுக்கும் துறையினின்றும் வேண்டிய மணலைக் கொண்டு தந்துவிட்டு நீயும் போவாயாக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/342&oldid=774446" இலிருந்து மீள்விக்கப்பட்டது