பக்கம்:நற்றிணை-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 1. à | * டொல்ே あn・ヘ気L நற்றிணை தெளிவுரை 个 - ാണ്ണ7°) கருத்து : 'இவளை மணந்து கொள்வதே இனி விரையத் தக்கது' என்பதாம். சொற்பொருள் : படப் ைப - கொல்லைப்புறம். தெண் கடல் - தெளிந்த் நீரையுடைய கடல். வியங்கொண்டு - நெறிக் கொண்டு. 'உறுவினை - செய்தற்கான வினை. அசாவா - சோர்த லற்ற உலைவில் வருத்தமும் அடையாத. கம்மியன் - பொற் கொல்லன். பொறியறு - விட்டுவிட்டுப் போன. அலவன் ஆட்டல் - கடற்கரை நண்டுகளை விரட்டியோட்டி விளையாடி மகிழ்தல். - - விளக்கம் : நின்னெடு நெருநை அலவன் ஆட்டுவோள்' எனவே, இருவருக்கும் உள்ள உறவைத் தான் அறிந்ததை உணர்த்தினளாயிற்று. சிலம்பு உடைதலால் அன்னையறிந்து இற்செறிப்பு நிகழ்தலை நினைந்து தலைவி வருந்துவள்; அவளை என்னல் ஆற்றுவித்தல் அரிது; ஆதலின், நீயே துறைமணல் கொணர்ந்து, கொல்லனிடம் இச் சிலம்பினைச் சரிசெய்து தந்து, இவள் கவலையைப் போக்குவாய் என்பதாம். நீ வந்து ஆற்று விப்பாயாக’ என்றது, அதுதான் வரைதற்பொருட்டு வருத லன்றிப் பிறவாற்ருல் இயலாதென்பதும் குறிப்பாக உணர்த்தி @Tóir ITLD, பயன் : "தலைவன் வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான் என்பதாம். இரண்டாவது துறைக்கு : தோழி! சேர்ப்பனேடு நேற்று அலவனடியதேைல உடைபட்ட நின் சிலம்பு கண்டு அன்னை சினங்கொள்வாள்; ஆதலின், சிலம்பனிடம், நீ பிரிந்து போயினை என்ருல், உடைந்த சிலம்டை மீளவும் ஒன்றுகூட்டு தற்கான மணல்கொண்டு வருவாயாக என்போம் என்று பொருள் காண்க. பயன் : தன் காதலைத் தோழி அறிந்தாளென அறியும் தோழி, கையுறைப் பொருளை ஏற்றுத் தலைவனுக்கு அருள் செய்வாள் என்பதாம். 364. பல்நாள் வாழலேன்! பாடியவர் : கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனர். திணை : முல்லை. துறை : தலைமகள் வரைவிடை மெலிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/343&oldid=774448" இலிருந்து மீள்விக்கப்பட்டது