பக்கம்:நற்றிணை-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நற்றிணை தெளிவுரை ((து - வி.) தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து சென்டுன் தலைமகன். அவன் மீண்டுவருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்து கழிந்தும், அவனை வரக்காணுததால் தலைவியின் துயரம் அளவு கடந்து பெரிதாகின்றது. அவன் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. சொல்லிய பருவம் கழிந்தன்று: எல்லையும் மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி ஆர்கலி வானம் நீர்பொதிந் தியங்கப் பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப இன்ன சில்நாள் கழியின், பல்நாள் 5 வாழலென் வாழி-தோழி!-ஊழின் உருமிசை அறியாச் சிறுசெங் நாவின் ஈர்மணி இன்குரல் ஊர்கணி இயம்பப் பல்லா தந்த கல்லாக் கோவலர் கொன்றையங் தீங்குழல் மன்றுதோறு இயம்ப, 10 உயிர்செலத் துணைதரும் மாலை, செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே! தெளிவுரை : தோழி! நெடுங்காலம் நீதான் வாழ்வாயாக. தலைவர் வருவேம் என்று சொல்லிய பருவமோ கழிந்துவிட்டது. பகற்போதும் இருள்மிகுந்த நடுயாமத்துக் காரிருளோடு சேர்ந்து நிரம்பிய இடிமுழ்க்கையுடைய ம்ேகங்கள் நீர்நிறைந்து வானத்தே இயங்க, வாடைக்காற்ருேடு பனிக்குள்ள சினமெல் லாம் என்மீது வந்து மோதுகின்றது. இப்படிச் சிலநாட்கள் கழிந்ததானல் முறையே இடிமுழக்கத்தை அறியாத, சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இன்னேசை, ஊரிடத்தே புகுந்து ஒலிக்கும்படியாகப் பலவான ஆநிரைகளைச் செலுத்தி வந்த, பிற தொழிலைக் கல்லாத கோவலர்களின், கொன்றைப் பழத்தாலே செய்துள்ள அழகான இனிய புல்லாங்குழலின் ஒலியும் மன்றிடந்தோறும் ஒலியா நிற்கும். என் உயிர் செல்லும். படியாக விரைந்துவருகின்ற மாலைப் பொழுதானது, குற்றந் தீர்ந்த மாரியுட்னேயும் சேர்ந்து ஒன்றுகூடி வருமானுல், அப்பாலும் பல நாட்கள், நான் உயிர் வாழ்ந்திருக்கவே மாட்டேன், காண்பாயாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/344&oldid=774450" இலிருந்து மீள்விக்கப்பட்டது