பக்கம்:நற்றிணை-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 - நற்றிணை ெ தளிவுரை ((து . வி.) இல்வாழ்விலே விருந்தோம்புதல் தலையாய அறம்ாகும். அதற்குப் ப்ொருள் வசதியும் வேண்டும். ஆகவே மனைவின்யப் பிரிந்து சென்றேனும் பொருள் தேடிவர நினைக்கின்முன் தலைவன். அந்த நின்ைவோடு, பிரிந்தால் நலிந்து நலனழியும் மனைவியையும் நினைக்கின்ருன். இல்வாழ்வின் ஆதாரமே அவள்தானே! அவளை வருந்தச் செய்து விருந்தறம் செய்தல் முடியுமா? எண்ணம் சிதறுகிறது! அவன் தன் நெஞ்சுக்குச்சொல்வதாக அமைந்த செய்யுள் இது. அரவு கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் திருந்திழை அல்குல் பெருந்தோட் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக் - கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5. மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை - மூங்கி லம்கழைத் தூங்க ஒற்றும் 10 வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே! தெளிவுரை : நெஞ்சமே நீ வாழ்க! பாம்பானது தலை யுயர்த்துப் படமெடுத்தாற் போன்றதும், பலவாகக் கலந்துள்ள பல கோவைகள் வீழ்ந்திருந்தலைப் பொருந்திய நுண்மையான துகிலினது ஊடாக வெளித்தோன்றித் தோன்றி இமைப்பதும், திருந்திய இழைகளை அணிந்திருக்கப் பெற்றதுமான அல்குல் தடத்தையும், பெருத்த தோள்களையும் கொண்ட இளமடந்தை நம் மனைவி. அவள்தான், நீலமணிக்கு ஒப்பான தன் கூந்தலை மாசில்லாதபடி தூய்மையாகக் கழுவி, கூதிர்காலத்தே பூக்கும் முல்லையின் குறுகிய காம்புடைய மலர்களை இளைய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகளும் மொய்க்குமாறு சூட்டிக் கொள்பவள். கருமையானதும் பலவான மென்மை சேர்ந்தது மான அந்தக் கூந்தலணையிலே துயிலும் இன்பத்தைக் கைவிட்டு, கரும்பின் வேல்போன்ற வெண்மொட்டு விரியும்படியாகத் தீண்டி, அறிவுமிகுந்த தூக்கணங் குருவியானது முயற்சி யெடுத்துச் செய்தமைத்த கூடானது, மூங்கிலின் அழகிய கழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/348&oldid=774458" இலிருந்து மீள்விக்கப்பட்டது