பக்கம்:நற்றிணை-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 345 யிடத்தே தொங்கியபடியிருக்க, அதை அசைத்து வருத்தும் வடபுல வாடைக்காற்று; அத்தகைய பருவத்தில் மனைவிமாரைப் பிரிவோரே இவ்வுலகத்திலே மிகுந்த அறியாமை உடைய வராவர்; ஆதலினல், நாமும் அவளைப் பிரியோம் என்பதாம். கருத்து : இவளை வாடவிட்டுப் பிரியோம் என்பதாம். சொற்பொருள் : அரவு - நல்லபாம்பு. கிளர்தல் - தலை யுயர்த்துப் படம் விரித்தாடுதல். விரவுறு - கலப்புக் கொண்ட காழ் - வடம். வீடுறு - வீழ்தல் பொருந்திய ஊடுவந்து - இடையிடையே தோன்றி. இமைக்கும் - கண் சிமிட்டுவது போலத் தோன்றியும் மறைந்தும் அழகுகாட்டும். குறுமகள் - இளமடந்தை; காமநுகர்வுக்கு உரிய பருவத்தள் என்று குறித்துக் கூறியது. கூதிர் - வாடைக்காலம். கால் - காம்பு. அலரி - அலர்ந்த மலர். மாதர் வண்டு - பெண்வண்டு; அழகிய வண் டெனினும் ஆம், பிரிய - கட்டு அவிழ்ந்து பிரிய. தீண்டி - கோதி; அதன் ஒரத்தை நாராகக் கிழித்துப் போவதன் பொருட்டுக் குருவி கரும்பின் மொட்டைக் கோதும் என்க. முதுக்குறை - அறிவு நிரம்பிய ஒற்றும் - தாக்கி மோதும். மடவர் - மடமை உடையவர். இறைச்சிகள் : 1) மணமற்ற கரும்பின் மலரைத் தீண்டித் தான் கூடு கட்டுவதற்குரிய நாரினைக் குருவி பெறுவது போலத் தானும் இன்பமற்ற வேற்றுநாட்டிற்குச் சென்று, இல்லத்துப் பொருள் வளத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் கடமைகளைச் செய்வதற்கு உரியவன் என்று நினைத்தான் அவன எனக. 2) குருவி தன் கூட்டை மூங்கிலிலே கட்டியிருப்பினும், வாடைக் காற்று மூங்கிலேயே அசைத்தாட்ட, அதனுடன் அக்கூடும் ஆடியாடி வருந்தும் என்றது, இவ்வாறே பிரிவாலே நலிந்திருக்கும் தலைவியும், பாதுகாவலான வீட்டில் இருந்த போதும், பிரிவின் துயரத்தை வாடையானது மிகுதியர்க்கி நலிவிக்கத், துன்புறுவள் என்பதாம். - விளக்கம் : வண்டினம் மொய்க்கும் முல்லையின் விரிந்த மலரைக் கூறியது மாலைக்காலத்தை உணர்த்தற்காம்; முல்லை மலர்வது மாலையாதலின் என்று கொள்க. மணியேர் ஐம்பால் மாசறக் கழிஇ... முல்லை சூடி என்றது, காமம் நுகரத் துடிக்கும் இளமகளிர் மாலையிலும் நீராடித் தம்மை ஒப்பனை செய்து காதலரை இன்புறுத்துவர் என்பதைக் காட்டுவதாம். அந்தப் பழக்கம் பிரிவுக்காலத்திலும் தொடர்ந்தாலும், அவள் - த.-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/349&oldid=774460" இலிருந்து மீள்விக்கப்பட்டது