பக்கம்:நற்றிணை-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை 29 அறிவு முதலாகிய குணங்களையும் அத் தவிர்தல் தன்ளுேடும் உடன்கொண்டு போய்விடுமே ! அவளின்றி யாம் உய்வது தான் எவ்வாருே, நெஞ்சமே ? சொற்பொருள் : இடம்படுத்தல்-காடுகொன்று திருத்தி தினக்கொல்லையை விரிவுபடுத்தல். கோட்டுதல்-புனத்தை வளைத்து வேலியிடல். தளிபதம்-மழை பெய்தலாகிய ஈரப் பதம்; என்றது உழவுக்கு ஏற்றதாகி செவ்விதான பதத்தின. செய்யுழும் உழவர் போலாது, கடுமுயற்சியோடு உழவைச் செய்வதற்கு உரியவர் காட்டை உழுபவராய குறவர் என்பதற்கு, கானுழு குறவர்’ எனக் கூறினர். "சில வித்து அகல விட்டு என்பது, விதைப்பதன் மரபை உணர்த்தும். அகல விதைப்பதனல், செடிகள் நன்கு வளர்வதற்கு வாய்ப்பு உண்டாகும். பலவிளைந்து' என்றது, பலவாகக் கிளைத்து வளர்ந்து விளைச்சலைத் தந்து என்றதாம். மிழலையம் தீங்குரல்’ என்றது, தலைவியின் குரலினிமையின் சிறப்பை வியந்து பாராட்டிக் கூறியதாகும் ; இதல்ை அவளுக்கும் தனக்கும் முன்ன தாகவே பழக்கம் உண்டெனக் குறிப்பாக உணர்த்தியதும் ஆம். பையுள்-காம நோயாகிய துன்பம். எல்லாம்-அறிவும் வீரமும் ஆகிய ஆண்மைப் பண்புகள் எல்லாம். இதனலே, அவர்களது மெய்யான காதலன்பை அறிந்தாளான தோழி, அவன் குறையை முடிக்கவே முற்படுவாள் என்பது மரபாகும். - - இறைச்சிப் பொருள்: சிலவாய விதைகளை விதைத்துப் பல வாய பயனைப் பெறுவார்போலத், தலைவியை விரும்பி யான் கூறும் இச் சிலவாய சொற்கள் நின் உள்ளத்தே நிலைபெற்று, நீயும் உதவினை ஆயின், யானும் அவளும் பலவாய இன்பங் களிலே திளைத்து வாழ்வோம் என்பதாம். விளக்கம்: தளிபதம் பெற்றன்றி வித்தல் நிகழாதவாறு போல, நீயும் நின் உள்ளத்தே என்பால் இரங்குதலாகிய மனநெகிழ்வைப் பெற்ருயாயின், என் சில சொற்கள் பெரும் பயனைத் தருதலும் நிகழும் என்பதாம். 'தன்பால் தோன் றும் அவலத்தை தலைவன் தோழிபால் உரைப்பது அவன் தகுதிக்கு இழுக்காகாதோ?’ என்ருல், காமவசப்பட்டார் அதனின்றும் உய்ந்து கரையேற எதனையும் மேற்கொள்ளத் தயங்கார் என்று கொள்க. இதுபற்றியே சான்ருேரும் இத்தகைய காட்சிகளைப் படைக்கின்றனர் என்பதும் அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/35&oldid=774462" இலிருந்து மீள்விக்கப்பட்டது