பக்கம்:நற்றிணை-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 - நற்றிணை தெளிவுரை துணைபெற்று மகிழாது, வாடையும் மாலையும் தாக்கி வருத்தத் தளர்ந்து நலிவாள் என்று நினைத்துத், தலைவன் கலங்குகின்ருன் எனக் கொள்க. - - - பயன் : தலைவன், தான் பொருள்தேடிவரப் பிரிந்து போவதைச் சிறிது காலம் ஒத்திப்போட்டுத், தன் ஆசை மனைவியுடன் இனிதாகக் கூடி வாழ்ந்திருப்பன் என்பதாம். 367. பரியாது வருவர்! பாடியவர் : நக்கீரர். திணை: முல்லை. துறை: வரவுமலிந்தது. சிறப்பு: அருமனின் சிறுகுடி. ((து வி) தலைவன் குறித்த காலத்தில் திரும்பிவரத் தவறியதால், அதுவரை பொறுத்திருந்த தலைவிக்கு, ம்ேலும் பொறுத்திருக்க முடியாமல் ஆற்ருமை மிகுதியாகின்றது. அவள் வேதனையை மாற்றக்கருதிய தோழி, தலைவனின் உடன் சென்ற வீரர்கள் முல்லைசூடித் திரும்பியது காட்டி, அவனும் விரைவில் வருவான் எனத் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இது.) கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் கூழுடை நன்மனை குழுவின இருக்கும் 5 ト/ மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி - மெல்லியல்.அரிவைகின் பல்லிருங் கதுப்பிற் குவளையொடு தொடுத்த நறுவி முல்லைத் தளையவிழ் அலரித் தண்நறும் கோதை - இளையருஞ் சூடி வந்தனர் நமரும் 10 விரியுளே நன்மா கடைஇப் பரியாது வருவர், இப் பனிபடு நாளே. தெளிவுரை : வளைந்து பார்க்கும் கண்ணினையும், கூர்மை யான வாயினையும் உடையதான காக்கையின் பேடையானது, நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டதாய், தன் சுற்றத்தைக் கூப்பிட்டழைத்து, கருங் கண்ணையுடைய கருணைக்கிழங்கின் கறியோடு கூடிய செந்நெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/350&oldid=774464" இலிருந்து மீள்விக்கப்பட்டது