பக்கம்:நற்றிணை-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 351 விளங்கும் வெள்ளிய அருவிகளை உடைய அழகிய கங்கைப் பேராற்றினைக் கரைகடந்து இடித்துச் செல்லும், அணையை உடைத்துச் செல்லும் வெள்ளத்தைப் ப்ோன்றதான, என் னுடைய நிறையை அழித்துப் பெருகும் காமவெள்ளத்திலே நீந்திக் கரையேறும் வழியினை, நான் நன்ருகத் தெரிந்தேனகவும் இல்லையே! இனி, நான் எவ்வாறு உய்வ்ேனே? என்பதாம். கருத்து : 'இனி, யான் உயிரோடு இருப்பதரிது’ என்பதாம். சொற்பொருள் : சுடர் - கதிரோன். சினம் - வெம்மை. குன்றம் - மேற்றிசைக் குன்றம். நிறை பறை - நிறைந்த சிறை யுடைய நிறைத்துப் பறத்தலையுடைய எனினும் ஆம். விசும் புகந்து - வானத்தை விரும்பி. எல்லை. பகற்போது. பெரும்புன் : பெரிய புன்மையுடைய. ஞெமை - மூங்கில். கரையிறந்து - கரை கடந்து. இழிதரும் - வழிந்தோடும். நிறை - நாண் முதலியவை. அடு கர்ம்ம் அவற்றை மோதிக் கடந்து வெளிப் படும் காமத் துயரம். விளக்கம் : மாலைப் பொழுது வருகின்றது; கதிரவனின் சினம் தணிந்துள்ளது; அவன் மேற்கு மலையைச் சேர்கின்ருன்; இரையுண்ட நாரையினம் வானை அடைத்தாற்போலப் பறந்து கூடுநோக்கிச் செல்லுகின்றன; முல்லைய்ரும்பும் இதழவிழ்ந்து மலர்ந்துள்ளது; இவ்வாறு எங்கும் இன்பமே பெருகும் காலத் திலும், துணைவரை அடையாது புலம்பும் தான்மட்டும் வருந்தி யிருப்பேன் என்கின்றனள். இன்றைக்கும் வருவது ஆயின்' என்றது, வரின் தான் உயிர் தரிப்பதரிது என்பதாம். அடக்கவும் அடங்காது கரைகடக்கும் காமமிகுதிக்குக், கங்கையின் கடும் புது வெள்ளம் கரைகட்ந்து சென்று, இடைப்படும் தடைகளை உடைத்துக்கொண்டு ஓடுவதைக் கூறுகின்றனள். நீந்தும் ஆறுநீந்திக் கரை சேரும் வழி. பயன் : இதனால், தலைவியின் ஆற்ருமைத் துயரமானது சிறிது தணிவதனல், அவள் மேலும் சிலகாலம் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பாள் என்பதாம். t 370. நகுகம் வாராய்! பாடியவர் : உறையூர்க் கதுவாய்ச் சாத்தனர். திணை : மருதம். துறை : (1) ஊடல் நீட ஆற்றய்ை நின்ருன் பர்ணற்குச் சொல்லியது; (2) முன் நிகழ்ந்த்தனைப் பாணற்குச் சொல்லியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/355&oldid=774474" இலிருந்து மீள்விக்கப்பட்டது