பக்கம்:நற்றிணை-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை, தெளிவுரை - 353 பட்டு நின்ற என்னைக் கண்டு, அவளும், முல்லையின் நாளரும் பைப் போன்ற குறுநகையினைத் தோற்றுவித்தனள். சிறந்த நீல மலர்போன்ற மையுண்ணும் தன் கண்களையும் கையால் மறைத்து மூடிக்கொண்டனள். அதனை நினைத்து எப்போதும் நான் மகிழ்ந்து நகையுடையவனுவேன். இப்போதும் நகுகின் றேன். நீயும் என் நிலைமையைக் காணுய் என்பதாம். கருத்து : 'குடும்பத் தலைவியான அவளை யான் என்றுமே மறந்தேனில்ல்ை' என்பதாம். . சொற்பொருள் : பாணன் - பாணர் குலத்தவன்; தல்ை வனுக்குப் பரத்தையர் உறவிற்குத் துணையாக நின்று உதவும் பணியாளன். நேரிழை - நேரிய அணிகளை உடையவள்; பிற மகளிரினும் சிறந்தவள் என்று வியந்து பாராட்டிக் கூறியது. கடும்பு - சுற்றம். கடுஞ்சூல் - தலைச்சன் பிள்ளைப்பேறு. நம்குடி. நம்குடும்பம். நகர் - மாளிகை. ஐயவி சிறு வெண்கடுகு. திதலை - தேமற்புள்ளிகள். பெயர் பெயர்த்து - பெயர் வேருென்ருகி; புதல்வன் தாயாகி. அவ்வரி - அழகிய கோடுகள். அகடு - வயிறு. குவளை - குவளை மலர். குவளை ஒற்றி - கண்களை ஒடவிட்டுப் பார்த்து என்றும் சொல்லலாம். முகை நாண் முறுவல்- முல்லை யது நாளரும்பு போன்ற மென்முறுவல்; முல்லைமுகையும் நாணித் தோற்கும் இளமுறுவல் எனினும் ஆம். விளக்கம் : குடிக்கு விளக்காகிய புதல்வனைப் பெற்றுத் தந்த சிறப்புடையவள்; என்புதல்வன் தாய் எனப் புதிய தகுதி யும் பெற்றவள்; அவளை எவ்வாறு மறப்பேன்?’ என்று தலைவன் தன் உள்ளன்பை இதன்மூலம் உணர்த்துகின்றன். இதல்ை, அவள் புதல்வனைப் பெற்று வாலாமையில் இருந்திட்ட காலத்திலே, அவன் புறம்போந்து பரத்தையொழுக்கத்திலே ஈடுபடநேர்ந்தது என்பதும் அறியலாம். அவள் பெற்று, அந்தக் களைப்புடன் கிடந்து துயின்றபோது அவன் சென்று கண்டதும், அவள் முறுவலித்துக் கையாற் கண்புதைத்ததும் சிறந்த குடும்ப யமாகும். நகுகம் என்றது, அத்துணை உறவுடையாளே இப்போது நம்மை வெறுத்து ஒதுக்குகின்றனள்; நம் நிலை இத்தகையதோர் நிலைக்குத் தாழ்ந்ததனை நினைத்து நாம் நகுவோம்’ என்று, விரக்தியாற் கூறினதாகக் கொள்க. கருவுயிர்த்த பெண்களின் வயிறு மீண்டும் பழைய நிலைக்கு வருமுன், உயிர்த்த சில நாட்களில், வரியும் திதலையுமாகத் தோன்றும் என்பதனையும் நயமாகக் காட்டியுள்ளனர் ஆசிரியர், - - \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/357&oldid=774478" இலிருந்து மீள்விக்கப்பட்டது