பக்கம்:நற்றிணை-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 357 தெளிவுரை : தோழி! கழிக்கரையைச் சேர்ந்துள்ள கர்னற்சோலையிலேயுள்ள, பனையின் தேனையுடைய அழிந்த பழமானது முக்கு இற்று, வளவிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு கரிய சேற்றிலே வீழ்ந்து ஆழமாகப் புதையுண்டு போனது. அது விழுந்த ஒசைகேட்டுச் சுற்றத்தைக் கொண்ட வான நாரைகள் அஞ்சி ஒடிப்போயின. அத்தகு நீர்த்துறை யினுக்கு உரியவன் தலைவன்! அவன், வளையாகிய சங்கைப் போன்ற வெண்மணலை உடையதான இடத்திலே நின்னைத் தழுவி மகிழவேண்டும் என்று விரும்பியது நினது பெருமித உள்ளம். அதனேடு பொருந்துமாறு, மனையிடத்தே இருந்தபடி மகளிர் ஒம்பிவர, கருங்கழியிடத்தே சென்று மீன்தேடுவர் பணியால் நனைந்த தலையினையுடைய பரதவர். அவருடைய திண்மையான மீன்பிடி படகிலிருக்கும் விளக்குகளை அம்மகளிர் வீட்டிலிருந்து பார்த்து எண்ணியபடியே இருக்கின்ற தன்மை யுடையது, கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழிசூழ்ந்த நம்முடைய நல்ல ஊராகும். அதுதான் நின்னை இனிமையோடும் பார்த்து, அன்னை நினக்குத் தந்த அசைகின்ற பெரிய கோலானது குலைந்ததனுலே நீ நோகின்றன என நினைந்து அஞ்சும். "நினைந்து அதற்கு வருந்தாதே கொள்' எனவும் நின்னைத் தேற்றும். ஆதலின், நீதான் ஏங்காதிருப்பாயாக என்பதாம். - கருத்து: "நின் துயரத்தை மறந்து ஆற்றியிருப்பாயாக' எனபதாம். சொற்பொருள் : அழிதக்கன்றே - அழியத் த கு ந் த து அல்லவே. தேனுடை அழி பழம் - தேனையுடையது போல முற்றக் கனிந்து அழிந்த பனம்பழம். வள்ளிதழ் - வளவிய இதழ். மூக்கு - குலையில் இணைத்திருந்த பாகம். அள்ளல் இருஞ் சேறு - அள்ளுதல் அமைந்த கரிய சேறு. ஆழப் படுதல் - ஆழ்த்துள் வீழ்ந்து புதையுண்டு போதல். வளைக்கோட்டு அன்ன - வளையாகிய சங்கு போன்ற, அண்ணல் உள்ளம் . பெருந்தகவுடைய உள்ளம். இணையல் - அழுது வருந்தல். விளக்கம் - விளக்குகள். கண்டல் - ஒருவகைக் கடற்கரை மரம். அலங்கல் - அசையும். மணற்று - மணலையுடையது. கோடு - கொம்பு. உள்ளுறை : முதிர்ந்து கனிந்த பனம்பழமானது, நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு நாரையினம் அஞ்சியோடும் என்றது, கனிந்த காதலுடையோனகிய தலைமகன் நின்னே வரைந்தாகை நின்னில்லத்திற்கு வருவானுயின், அலர் கூறும் பெண்டிர்கள் அஞ்சி, வாயடங்கியவராகி ஒதுங்கிப் போவர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/361&oldid=774488" இலிருந்து மீள்விக்கப்பட்டது