பக்கம்:நற்றிணை-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நற்றிணை தெளிவுரை இறைச்சி : மகளிர் வீட்டிலிருந்தவாறு, மீன் பிடிக்கும் பரதவருடைய விளக்குகளை எண்ணியபடி இருப்பர் என்றது. பரதவர் மகளிரின் உள்ளம் எப்போதும் அவர்தம் காதலரைச் சுற்றியே படர்ந்துகொண்டிருக்கும் என்பதாம். இதை அறியாது போயினரே நம் தலைவர் என நொந்ததுமாம். விளக்கம் : மீன் பிடிக்கப் போகும் பரதவர் அவர்தம் தொழிலே கவலையுடையராய் முனைந்திருப்பர். அவர்தம் மகளிரோ அவர்தம் படகின் விளக்கினை எண்ணிக் கண்டபடி அவர் நலனை விரும்பி வேண்டியிருப்பர். அவ்வாறே தலைவி இல்லறமாற்றலை விரும்பி மணத்தை எதிர்பார்த்திருக்கவும், தலைவன் அவள் நினைவற்றுத் தன் போக்கிலேயே காலம் கடத்துகின்ருன் என்பதாம். மீனுணங்கலைக் காப்பதற்குத் தந்த கோல் வளைந்ததென அவள் வருந்துவதாக நினைத்து, அவள் காதலனைக் காணுது வருந்துதலை நினையாத ஊர்ப் பெண்டிர், அவளைத் தேற்றுவர் என்று, ஊர்ப்பெண்டிரது கரவற்ற நல்ல உளப்பாங்கையும் உரைத்தனள். - பயன் : தலைவன் வரைந்து வந்து மணந்து கொள்ளத் தலைவியும் அவனுடன் இணைந்து இல்லறம் இனிதாற்றி மகிழ்வள் என்பதாம். 373. நாளையும் இயலுமோ! பாடியவர் : கபிலர் திணை : குறிஞ்சி. துறை : செறிப்பு அறிவுறீஇயது. ((து. வி.) களவிலே_வந்து மகிழும் இயல்பினளுகிய தலைவ்ன், ஒரு பக்கமாகச் செவ்விநோக்கி மறைந்திருப்பதைத் தோழி காண்கின்ருள். அவனுள்ளத்திலே, தலைவியை மணந்து இல்ல்றம் பேணுதற்கான முயற்சியிலே விரைவு உண்டாக்குதல் வேண்டும் என்றும் கருதுகின்ருள். அவள், தலைவியிடம் சொல்வாள் போல, அவனும் கேட்குமாறு, இனிக் களவுறவு வாய்ப்பதரிது எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது வாகும்.) o முன்றில் பலவின் படுகளே மரீஇப் புன்தலை மந்தி தூர்ப்பத் தந்தை மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி, ஐவன வெண்ணெல் குறுஉம் நாடனெடு குருடைச் சிலம்பின் அருவி ஆடிக் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/362&oldid=774490" இலிருந்து மீள்விக்கப்பட்டது