பக்கம்:நற்றிணை-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 363. தெளிவுரை : நீண்ட கிளைகளைக் கொண்ட புன்னையின் நறிய பூந்தாது உதிரும்படியாக, அக் கிளைகளின்மீது அழகாக அமர்ந்திருக்கும் நாரைக்கூட்டம், அக் கிளைகளை அலைத்தபடி பெயர்ந்து உலவா.நிற்கும். பலவாகிய பூக்களையுடைய கானற் சோலைகளையும் மிக்க உவர்நீர்ப் பெருக்கையும் உடைய சேர்ப்பனே! நீதான் என்பால் அன்புள்ளவன் அல்லை! ஆதலினலே, பெரிதான கடலிடத்து இரவுப் பொழுதிலே திங்கள் மண்டிலம் வானிடத்தே வெளிப்பட்டதனலே, வலிய அலைகள் எழுந்து கரையை வந்து மோதுவனபோல வார நிற்கும், உயர்ந்த மணல்மேட்டுப் பகுதியிலுள்ள கொல்லை யிடத்ததான, எம்முடைய வாழ்தற்கு இனிதான ஊருக்கு, அவளது கருத்தின்படியே விருப்போடு நட்க்கும் என்பாலும் தன் துயரத்தை வாய்விட்டுச் சொல்லுவதற்கு வெட்கப்பட் டிருக்கும், நறிய நுதலையுடையவளான தலைவி உவப்படையு மாறு, நீதான் வரைவொடு வந்தாயானல், மிகவும் நலமா யிருக்கும். - கருத்து : அன்பிலை எனினும், கடமை கருதியாவது நீதான் வரைந்து வருதல் வேண்டும்' என்பதாம். சொற்பொருள் : நீடுசினை - நீண்ட கிளைகள்; உயரமாக வளர்ந்திருக்கும் கிளைகளும் ஆம். புன்னை புன்னைமரம். தாது - மகரந்தம். தோடு - தொகுதி. தலைப்பெயரல் - புறப்பட்டுப் போதல். மல்கு நீர் - மிகுதியான நீர்வளம். புலன் - அறிவு: கருத்து. என்னும் - என்பாலும். மண்டிலம் - திங்கள் மண் டிலம். பெயர்தல் - வானிலே எழுதல். உரவு - வலிமை. எறிவன - மோதித் தாக்குவன. பட்ப்பை - தோட்டப்புறம். உறைவின் ஊர் - உறைதற்கு இனிதான ஊர். உள்ளுறை : புன்னைக் கிளையிலே தங்கி மகிழ்ந்த நாரைக் கூட்டம், பின்னர் அதன் பூக்களிலுள்ள மகரந்தத்தை உதிர்த்த படி, அதற்குத் தீமை விளைத்துப் போகும் பல்பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப என்றனள். அவ்வாறே, நீயும் களவிலே கூடி யின்புற்று மகிழ்ந்தனையாகி, இப்போது அவள் கலங்கித் துயரடையுமாறு கைவிட்டு அகன்றன என்பதாம். அப்பழி தான் தீரும்படிக்கேனும், அவளை வரைவொடு வந்து மணந்து கொள்வாயாக என்பதுமாம். இறைச்சி: திங்கள் வானிலே எழுதலைக் கண்டதும், கடலானது பொங்கியெழுந்து ஆரவாரித்து வரவேற்கும் என்றது, அவ்வாறே நீதான் வரைவொடும் வரின், எம் ஊரவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/367&oldid=774503" இலிருந்து மீள்விக்கப்பட்டது