பக்கம்:நற்றிணை-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நற்றிணை தெளிவுரை மகிழ்ச்சியால் ஆரவாரித்தவராக நின்னை வரவேற்று வரைவுடன் படுவர் என்றதாம். - விளக்கம் : அன்பிலை என்றதன்பின், வதுவை ஆயின் நன்றே என்றது, நினக்கு இயல்பாக இருத்தற்குரிய அன்பில்லை என்றபோதும், நின்னலே துயருள் வீழ்த்தப் பெற்ற தலைவி யைக் காக்கும் பொருட்டாகவேனும், நீ வந்து அவளை மணந்து கொள்வாயாக என்பதாம். - பயன் தலைவன் தெளிவுற்று வரைவொடு வர, மண வினையும் தமர் இசைவுடன் நிகழ்ந்திட, அவர்கள் இல்லற வாழ்விலே இன்பத்துள் திளைத்துத் துயரம் தீர்வர் என்பதாம். 376. சிறிய உரைமின் பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. ((து-வி.) தலைவன் களவு உறவிலேயே மனவீடுபாடு கொண்டு தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் ஒரு நாள் வந்து, ஒருபுறமாக நிற்பதனைக் கண்டாள் தோழி. கிளிகளுக்குச் சொல்வாள்போல, அன்னை இற்செறித்த செய்தியைத் தலைவனும் கேட்டுணருமாறு தெரிவிக்கின்ருள்.) முறஞ்செவியானத் தடக்கையின் தடைஇ. இறைஞ்சிய குரல பைங்தாட் செந்தினை வரையோன் வண்மை போலப் பலவுடன் கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! குல்லை குளவி கூதளங் குவளை 5 இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும் நற்ருர் மார்பன் காண்குறில் சிறிய கன்கவற்கு அறிய உரைமின்; பிற்றை அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி 10 வறும்பும்ை கதவல் விடாமை அறிந்தளிர் கொல்லோ அறனில் யாயே! தெளிவுரை முறம்போலும் செவியையுடைய யானையது, வளைந்த கைபோல வளைந்து தலைசாய்த்த கதிர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/368&oldid=774505" இலிருந்து மீள்விக்கப்பட்டது