பக்கம்:நற்றிணை-2.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 நற்றிணை தெளிவுரை அகம்(10) மடலூர்வார் சூடும் மாலையைக் குறிக்கும். சிறுநுதல் நோய் செய்தலை, கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் பிண்த் தற்ருல் எம்மே எனக் குறுந்தொகையும் (129) கூறும். . பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தலைவியை ഷഖAn கூட்டுவித்து, அவன் ஏக்கத்தைப் போக்குவாள் என்பதாம். பாடபேதங்கள் : மடல் பாடிய மோதங்கீரனர், அணிநிலாப் போல கழறும் மெலிக்கும்; அரிது துற்றது. துற்றதுநுகர்ந்தது. r - 378. நாடாது இயைந்த நட்பு! பாடியவர்: வடமவண்ணக்கன் பேரிசாத்தனர். திணை நெய்தல். துறை : (1) தோழி சிறைப்புறமாகச் சொல்லியது: (2) தலைமகன் ஒருவழித் தண்ந்த பின்ன வன்பொறை எதிர் மொழிந்ததுஉம் ஆம். . ((து - வி.) களவிலே வந்தொழுகுவானகிய தலைவன் ஒருபுறம் வந்து நிற்பதறிந்த தோழி, தலைவியிடம் சொல்வாள் போல, அவனும் கேட்டு வரைவொடு புகுதற்கு முயலும் வண்ணம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) தல்ைவன் பிரிவின்போது வருந்தி நலிந்த தலைமகளிடம், வலிதிற் பொறுத்திருப்பாயாக என்று தோழி சொல்லத் தலைவி தன்னுடைய நிலைமை அவளுக்குப் புலப்படுமாறு கூறியது இது வென்றும்கொள்ளலாம்.) யாமமும் நெடிய கழியும்; காமமும் கண்படல் ஈயாது பெருகும்; தெண்கடல் முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும், ஆங்கவை கலியவும், நீங்கி யாங்கும், 5 இரவிறந்து எல்லை தோன்றலது அலர்வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட - ஈங்கா கின்ருல் தோழி! ஓங்குமணல் வரியார் சிறுமனை சிதைஇ வந்து பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, 10 பாடிமிழ் பனிநீர்ச் சேர்ப்பனெடு நாடாது இயைந்த நண்பினது அளவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/372&oldid=774515" இலிருந்து மீள்விக்கப்பட்டது