பக்கம்:நற்றிணை-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970 நற்றிணை தெளிவுரை சிறுமனை சிதைத்தான்; இன்றும் நம்மை மணந்துகொண்டு மனையறம் காவாது, அயலிற் பெண்டிராற் பசலைபாடச் செய்து வருத்தினன் என்றுகூறி மனம் வேதனைப்படுதலாம். பயன் : (1) கேட்கும் தலைவன் மணவினை புரிதற்கு வேண்டியன விரைவிற் செய்பவனவான் என்பதாம்; (2) அன்றும் மனசிதைத்தான், இன்றும் பழிக்கு ஆளாக்கினன் எனக்கூறிப் பெருமூச்சுவிட்டுச் சிறிது ஆறுதல் பெறுதலுமாம். 379. நீலமும் கூந்தலும்! பாடியவர் : குடவாயிற் கீரத்தனர். திணை : குறிஞ்சி. துறை : (1) தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது: (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது உம் ஆம். ((து - வி.) (1) தலைமகன் தோழியின் உதவியை வேண்டு கின்ருன், தலைவியைப் பெறுவதற்கு. அவள், தலைவியின் குழந்தைத்தனம் மாருத இயல்பை எடுத்துக்காட்டி, இத்தகை யாள் எவ்வாறு நின்னுடைய ஆர்வத்துக்கு உதவமுடியும் என்று மறுக்கின்ருள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகள் வீட்டிலே வைத்துக் காவற் படுத்தப் பெற்றனள். அவள் கலக்கத்தைப் பிரிவினது ஏக்கத் தால் என்று கருதிய தோழி ஆறுதல் கூற, அவள் அதற்கான காரணம் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகவும் கொள்ளலாம்.) புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை கண்ணிய முன்றில் போகாது. எரியகைந் தன்ன வீததை இணர வேங்கையம் படுசின பொருந்திக் கைய தேம்பாய் தீம்பால் வெளவலின் கொடிச்சி 5 எழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயில், மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனது 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/374&oldid=774519" இலிருந்து மீள்விக்கப்பட்டது