பக்கம்:நற்றிணை-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 371 ஆடுமழை தவழும் கோடுயர் பொதியில் ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன. சிவந்தே! தெளிவுரை : ஐயனே! புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் அறிவு முதிராத வலிய குட்டியானது, குன்றத்தின் பக்கமாக ஆள்ள சிறுகுடியிருப்பிலுள்ள வீடுகளின் முற்றத்தினின்றும் போகாதேயே இருக்கும். நெருப்பு கப்புவிட்டாற் போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய வேங்கையின் தாழ்ந்த கிளைமீதிலே பதுங்கியிருந்தபடி, ஒருநாள் கொடிச்சியின் கையகத்திலிருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தோடும் பறித்துக்கொண்டும் அது போய்விட்டது. அதனலே, கண்மை எழுதிய எழிலுடைய தன் அழகெல்லாம் கெடும்ப்டியாக அவள் அழுத கண்ணினள் ஆயினுள். இரவலர்க்குத் தேர்களை வழங்கி மகிழும் சோழரது குடவாயில் என்னும் ஊரிடத்து, மழை பெய்து நிரம்பிக் கிடக்கும் அகழியில்ே குளிர்ச்சியாக மலர்ந் துள்ள, பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலரைப் போன்ற வாயின, அக் கண்ணிரைத் துடைத்த அவள் கையின் விரல்கள். அத்துடனும் நில்லாது, அழகிய வயிற்றினிடத்தேயும் மீண்டும் மீண்டும் அவள் அடித்துக் கொண்டதேைல, இடையருது இயங்கும் மேகங்கள் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் மலையினிடத்தே, உயர்ந்த பெரிய மலைப்பக்கத்திலே பூத்த காந்தளின் கொழுமையான மொட்டை யும் போன்றவாய் அவை:சிவந்தும் போயின. இத்தகையாளைக் கண்டு மயங்கியதும், நின் காமம் தணிப்பாள் அவளே என்பதும் பொருந்தாதுகாண் என்பதாம். - கருத்து அவள் நின் வேட்கை தீர்க்கும் பருவத்தாள் அல்லள் என்பதாம். - - சொற்பொருள் : கல்லா - தன் குலத் தொழில் ஏதும் கல்லாத வன்பறழ் - முரட்டுத்தனமுடைய குட்டி. குன்று உழை - குன்றின் பக்கம். முன்றில் - வீட்டு முற்றம். அகைதல்கப்பு விட்டு எரிதல். இணர் - பூங்கொத்து. படுசினை - தாழ் வான கிளை. கைய கையகத்துள்ள. கொடிச்சி - குறமகள். எழுதெழில் - மை தீட்டிய அழகு. மாரியங் கிடங்கு - மழை நீரால் நிரம்பிக்கிடக்கும் அகழி. குடந்தைவாயில் - குடவாயில். ஈரிய - தண்ணென. பா அய் - பரவி. அவ்வயிறு -அழகிய வயிறு. பொதியில் - பொதியில் மலை. கொழுமுகை - கொழுமையான மொட்டு, மணக்கும் பருவத்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/375&oldid=774521" இலிருந்து மீள்விக்கப்பட்டது