பக்கம்:நற்றிணை-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நற்றிணை தெளிவுரை எழுப்புதல்; யாழிசைத்து ஒலியெழுச்செய்து மயக்குதல், பாடுமனை - சிறந்த மனை; தலைவியிருக்கும் மனை; பாடுகிடக்கும் மனையெனக் கொண்டு, அவள் விரதநெறி ஒம்பியிருக்கும் மனை எனலும் ஆம்; விரதம் தலைவனை இனிக் கூடோம் என்பது. பூணிலை . பூண்டிருக்கும் நிலை. முனிகுவ - வெறுப்ப. விரகு - ப்யன்தரும் தகுதிப்பாடு. வேட்டது - விரும்பியது. விளக்கம் : தன்னையும் புதல்வனையும் மறந்து, பரத்தை தரும் இழிந்த இன்பமே பெரிதென மயங்கி, அவ்வீடே கதியெனச் சுற்றும் அவனுக்கும் எமக்கும் இனி எந்த உறவும் வேண்டாம்; இங்கே நின்று வீண்பேச்சுப் பேசுதலும் வேண்டாம்; நின் தலைவனுடனும், யாழுடனும் அங்கேயே போவாயாக என்று சீறுகின்ருள் தலைவி. - பாடபேதம் : மாசு பட்டின்றே, தீம்பால் பணிற்ற; புனிறு நாறு வம்மே; பாடல் பாடல் கூடாது நீடலின் பூணிலை பொருஅ. பயன் : பாணன் நிகழ்ந்தது சொல்லக் கேட்கும் தலைவன், தான் குடிமரபு குன்றியமைக்கு நொந்து, தலைவியைப் பணிந்து பலப்பல சொல்லித் தெளிவித்து, மகிழ்ச்சி செய்வான் என்பதாம். 381. வேர்கிளர் மாஅத்து அம் தளிர் பாடியவர் : ஒளவையார். திணை : முல்லை. துறை : பிரிவிடை ஆற்ருளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது. ((து . வி): வினவியிற் பிரிந்து போகும்போது, இன்ன காலத்து வருவேன் எனக் குறித்துச் சென்றனன் தலைவன். அந்த காலம் வரும்வரை பொறுத்திருந்த தலைவி, அது வரவும் அவனை வரக்காணுதாளாகத் துடித்துச் சோர்கின்ருள். அவள் தன்னுள்ளே வருந்திக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.) அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் பெரும்பிறி தின்மையின் இலேனும் அல்லேன்; கரைபொரு திழிதரும் கான்யாற்றிகுகரை வேர்கிளர் மாஅத்து அந்தளிர் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/378&oldid=774525" இலிருந்து மீள்விக்கப்பட்டது