பக்கம்:நற்றிணை-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நற்றிணை தெளிவுரை ஆற்றங்கரையிலே இடிகரையிலிருக்கும் மாமரம், வேர் பறிக்கப் பட்டு எந்தநேரம் வீழுமோ என்ற நிலையிலே தந்தளித்தபடி யிருக்கும்; அதன் அழகிய தளிர் சிறிது பொழுதிலேயே அழிவை அடையக்கூடும்; இவ்வாறு பிரிவுத் துயரம் தன் உயிரை வேரறுக்கத் தானும் மாந்தளிர்போல உயிர்கொண்டு இருப்ப தாகத் தலைவி கூறுவது சோகத்தின் இறுதி எல்லையாகும். பாடபேதங்கள் : ஈரநெஞ்சம் ஒடிச் சேண் விளங்க. பயன் இதல்ை அவள் மேலும் சிறிதுகாலம் அவன் வரவுநோக்கிப் பொறுத்திருப்பாள் என்பதும், அவனும் சொற்பிழையாய்ை வந்து சேர்ந்து அவள் துயர் தீர்ப்பான் என்பதும் ஆம் 382. கண்ணுர் தூற்றும் பழி! பாடியவர்: நிகண்டன் தலக்கோட்டுத் தண்டனர். திணை: நெய்தல். துறை: ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்ருள் ஆகிநின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினுட்குத் தலைமகள் சொல்லியது. ((து - வி) களவுறவிலே இடையில் ஏதோ ஒரு செயல் பற்றித் தலைவன் சில நாட்கள் வாராதிருக்கின்றனன். அக் காலத்து மாலைவேளைகளில் தலைவி படும் துயரைக் கண்டு தோழி மிகவும் வருத்தமுற்றுச் சோர்ந்து போகின்ருள். அவளைத் தேற்றும் வகையிலே, தலைவி, தான் ஆற்றியிருப்ப தாகக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) கானல் மாலைக் கழிநீர் மல்க நீல்கிற நெய்தல் கிறையிதழ் பொருந்த ஆனது அலக்கும் கடல்மீன் அருந்திப் புள்ளினம் குடம்பை உடன்சேர்பு உள்ளார் - துறந்தோர் தேஎத்து இருந்துகனி வருந்தி 5 ஆருயிர் அழிவ தாயினும்-நேரிழை! கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்புநீர்த் தண்ணம் துறைவன் காண, கண்ணுர் தூற்றும் பழிதான் உண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/380&oldid=774531" இலிருந்து மீள்விக்கப்பட்டது