பக்கம்:நற்றிணை-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 377 தெளிவுரை: நேரியவான கலன்களனிந்த தோழியே! பரவிக் கிட்க்கும் கடல் நீரையுடைய குளிர்ந்த துறைக்குத் தலைவனகிய நம் காதலன் நாணும்படியாக நமக்குப் பகையாயினேர் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுந்தான் மிகுதியாக உண்டல்லவோ ஆதலினலே கானற் சோலையிலே, மாலைப் பொழுதிலே, கழியிடத்து நீரானது மிகுதியாகப் பெருகிற்று: நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிந்து விட்டன; அமைந்திராதே அலையெழுந்து உலவும் கடலிடத்தே சென்று, மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுப், புள்ளினங்களும் தத்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று சேர்கின்றன; இவற்றைத் தாமும் கண்டறிந்தும் நம்மை நினையாதவராயினர் நம் தலைவர். நம்மைப் பிரிந்து சென்ற அவர், நம்ம்ை இருக்கவென விட்டுச் சென்ற இத் தேசத்திலேயே இருந்தபடி, அவரை நினைந்து நினைந்து மிகவும் வருந்தி, நம் அரிய உயிரே அழிவதாலுைம் அழிவதாக. நாம் நம் துயரம் புறத்தார்க்குத் தோன்ருதபடி மறைத்தலே எவ்வாற்ருனும் வேண்டுங்காண்! கருத்து : உயிரே போவதாயினும் நம் துயரம் வெளித் தோன்ருதவாறு மறைத்தல் வேண்டும்’ என்பதே என் நிலை என்பதாம். சொற்பொருள்: கானல் - கானற் சோலை. மாலைக் கழிநீர் மல்க - மாலைப் போதிலே கழியிடத்தே நீரானது பெருக; அலை பெரிதாக எழுந்து மோதுதலால் கழியிலே கடல் நீர் புகுந்து, அது பெருகுவதாயிற்று என்க. நிரையிதழ் - வரிசையாக அமைந்த இதழ். பொருந்த கு விந்து மூடிக்கொள்ள. ஆனது - அமையாது. அலேக்கும் - அ ைச ந் தபடியிருக்கும். குடம்பை - கூடு. உடன் சேர்பு - ஒன்ருகக் கூடிச் சேர்ந்து, ஆணும் பெண்ணும் ஒன்ருகக் கூடியபடி தத்தம் கூட்டிற் சென்று சேரும் என்க. துறந்தோர் தேஎத்து - துறந்தோர் இருக்கவெனக் கைவிட்டுச் சென்ற இந் நாட்டிடத்து. காத்தல் - மறைத்துக் காத்தல். பரப்பு நீர் - பரவிய நீர். நாண் - நாணும்படியாக. விளக்கம்: கானலை முதற்கண் கூறியது, இயற்கைப் புணர்ச்சி பெற்ற இடமாதலால், அந் நினைவே முதற்கண் உளத் தெழுதலால். நீலநிற நெய்தல் நிரையிதழ் பொருந்துதலைக் கூறியது, தான் இதழ் பொருந்தாதே உறக்கமின்றித் துயரப் படவேண்டியதை நினைத்துக் கூறியதாம். கடல் மீன் அருந்திய புள்ளினம் குடம்பைக்கு ஒருசேரச் சென்றது கூறியது, அவரும் ந.-24 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/381&oldid=774533" இலிருந்து மீள்விக்கப்பட்டது