பக்கம்:நற்றிணை-2.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நற்றிணை தெளிவுரை பயன்: தலைவியின் மனத்துயரத்தை உணரும் தலைவன், அவளை முறையாக வரைவொடு வந்து மணம் புரிந்து கொள்ளும் உறுதியுட்ையவகைச் செயல்படுவான் என்பதாம். 384. மருந்து எனப் படுஉம்! பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ. திணை : முல்லை. துறை : உடன் போகா நின்ருன் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. ((து - வி.) தலைமகளைப் பாலைவழியே தன்னுரர் நோக்கி அழைத்துப் போகின்ருன் தலைவன் ஒருவன். அவள் கால் பரற்கற்கள்மேல் பட்டு வருந்தாவாறு, வேங்கை மலர் உதிர்ந்து கிடக்கும் பக்கமாக அழைத்துச் செல்பவன், அவளுக்குச் சோர்வு ஏற்படாதிருக்கத், த்ன் நெஞ்சொடு சொல்வான்போல, அவளும் கேட்டு மகிழக் கூறுவதாக அமைந்த செய்யுள், இது.) பைம்புறப் புறவின் செங்காற் சேவல் களரி ஓங்கிய கவைமு ட்கள்ளி முளரியம் குடம்பை ஈன்றிளைப் பட்ட உயவுகடைப் பேடை உணிஇய, மன்னர் முனகவர் முதுபாழ் உகுநெற் பெறுஉம் 5 மாணில் சேய்காட்டு அதரிடை மலர்ந்த கல்நாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ காண்இனி வாழி-என் நெஞ்சே! நாண்விட்டு அருந்துயர் உழந்த கால 10 மருந்தெனப் படுஉம் மடவோ ளேயே! தெளிவுரை என்னுடைய நெஞ்சமே! நீதான் வாழ் வாயாக! நாம் இவளே அடையமுடியர்தேமாய்ப் பொறுத்தற் கரிய துயரத்திலே வருந்தியிருந்த போதிலே, தனக்குரிய பண் பாகிய நாணத்தையும் ஒதுக்கிவிட்டு, நம் நோய்க்கு மருந்தென வந்து வாய்த்தவள். இந்த இளமையோள். இவளே பசுமையான புறத்தையும் சிவந்த கால்களையும் கொண்ட புறவின் சேவலானது, களர் நிலத்திலே உயரமாக வளர்ந் திருந்த கவையான முட்களைக்கொண்ட கள்ளியின் தலைப்புறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/384&oldid=774539" இலிருந்து மீள்விக்கப்பட்டது