பக்கம்:நற்றிணை-2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

883 - நற்றிணை தெளிவுரை செல்லும் துணிவைப் பெண் கொள்ளும்போது, நாணத்தை விட்டு விடுத்லும் அறமென்றே கொள்க. இது முல்லைத்திணைச் செய்யுள் என்றிருப்பினும், முனைகவர் முதுபாழ்' எனப் பால யும் வந்தது காண்க பர்லேயெனத் திணை கொள்ளின், பிரிந்துறையும் தலைவன், தன் காதலி தன்னேடு முன்னர் உடன்பேர்க்கில் உடன்வந்த செவ்வியை நினைத்து, அவள் நினைவாலே ஏங்கி வருந்துவதாகக் கொள்க. - பாடபேதங்கள் : வண்புறப் புறவு; பண்புறப் புறவு: மாணில் சேய்நாட்டு. 385. மலரும் கூம்பின! பாடியவர் : ...... திணை : நெய்தல் . துறை: ...... இப்பாட்டின் ஆசிரியர் பெயர் 鷺 விவரங்கள் எதுவும் இந்நாள் வரையிலும் கிடைக்கப் பேறவில்லை. ஏழு அடிகள் மட்டுமே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன. பேராசிரியர் ஒளவை. சு. அவர்கள் தம்முடைய விரிவான ஆராய்ச்சியுரை பதிப்பில், அஞ்சிலாந்தையார் பாட்டு என்ற குறிப்பினைத் தமிழ்ச்சங்கப் பதிப்பில் கண்டதாகவும் எழுதி புள்ளார்கள். - ஆகவே கிடைத்த வரைக்கும் இங்கே நாமும் காணலாம். எல்லை சென்றபின், மலரும் கூம்பின: , - புலவுநீர் அடைகரை யாமைப்பார்ப் போடும் அலவனும் அளவயின் செறிந்தன: கொடுங்கழி இரைநசை வருத்தம் வீட மரமிசைப் - புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனுல் . - 5 பொழுதன்று ஆதலின், தமியை வருதி எழுதெழில் மழைக்கண்...... தெளிவுரை: பகற்போதானது சென்று கழிந்ததன் பின்னர் வந்துற்ற மாலைக் காலத்திலே, கழிப்பாங்கரிலேயுள்ள நெய்தல் மலர்களும் இதழ் குவிந்துவிட்டன: புலவு நாற்றத் தையுடைய அடைகரையினிடத்தே, யாமையின் பார்ப்போடு நண்டுகளும் தத்தம் அளேகளினிடத்தே சென்று ஒடுங்கிக் கொண்டன. வளைந்த கழியினிடத்தே சென்று இரையினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/386&oldid=774543" இலிருந்து மீள்விக்கப்பட்டது