பக்கம்:நற்றிணை-2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை sss தேடித்திரியும் வருத்தமானது கழிந்து போனதாக, மரத்தின் மேலுள்ள கூட்டினிடத்தே நான்ரகளும் தம் குஞ்சுகளோடு சென்று தங்கின. அதனலே, இதுதான் நீயும் வருதற்குரிய பொழுது அல்ல. ஆதலினலே, தனியனகவே வருகின்றன. மையெழுதிய மலர் போன்ற குளிர்ந்த கண்...... - சொற்பொருள் : எல்லை - பகற்போது, கதிரவனும் ஆம். மலர் - நீல மலர். கூம்பின - இதழ்குவிந்தன. புலவு நீர் -புலவு நாற்றத்தையுடைய நீர். நீர்மை - தன்மை. அடைகரை - அடையாக அமைந்துள்ள கரைப்பாங்கர்; அது புலவு நாற்றம் உடையதானது, கடற்பறவைகள் தாம் பற்றிய மீன்களை அதன்கண் இருந்து குத்தித் தின்பதனல். கொடுங்கழி- வளைந்த கழி. வீட- இல்லாது ஒழிய, மரமிசை - மரத்தின்மேல்; கண்டல் மரமாகவோ, பனைமரம்ாகவோ கொள்க. பிள்ளை - குஞ்சுகள். பொழுதன்று - பொழுது இதுவன்று; கடற்கரைப் பாங்கரிலே, பரதவர் மகளிர் களவு வாழ்க்கையானது பெரும்பாலும் , அவர் மீனுணங்கலைக் காத்திருப்பதும், பிறவுமான தொழில்களில் ஈடுபட்டோராய் இருக்கும் பகற் போதிலேயே நிகழும்: மாலைப்பொழுது கடல்மேற் சென்ற தமர் திரும்பிவரும் கால மாதலானும், இல்லுறை மகளிர் தத்தம் இல்லத் தலைவரை எதிர்கொள்ளக் கடற்கரை நோக்கி வரும் நேரம் ஆதலாலும், கட்டற்கரையும் கழிச்சோலையும் ஆரவாரத்துடன் திகழ்வதனல், களவு வாழ்க்கைக்கு இசைவானது அன்று எனலாம். ஆகவே தான், பொழுதன்று ஆதலின்' என்று குறித்தனர். தமியை வருதி - தனியனுக வருகின்றன; அவன் வரைவு வேட்டுச் சான்ருேரோடு வருவதனை எதிர் பார்த்திருந்த தோழி, அவன் தனியனுக வருவது கண்டு மனம் வருந்திக் கூறியதாகும். விளக்கம் : எல்லை சென்றபின் மலர் கூம்பினது போல, இவளும், நீதான் அருளிச்செய்து அகன்றுபோயின. பின்னர் வாட்டமடைவாள் என்பதாம். யாமைப் பார்ப்பொடு நண்டும் தம் அளவயிற் செறிந்தன என்றது. பிறர் வரவஞ்சி அவை ஒடுங்கின என்பதாம்; அதுபோல அலர் உரைப்பார் பேச்சுக்கு அஞ்சித் தலைவியும் வீட்டினுள் ஒடுங்கினள் என்ப தாம். புள்ளும் பிள்ளையோடு வதிந்தன என்றது. அவ்வாறே தலைவனும் தலைவியை மணந்து இல்லறமாற்றிப் புதல்வன அவள் பெற்றுத்தர, மாலைவேளையிலே, அவளுடன் இல்லி லிருந்து மகிழவேண்டும் கடப்பாடுடையன் என்று சுட்டிய தாம. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/387&oldid=774545" இலிருந்து மீள்விக்கப்பட்டது