பக்கம்:நற்றிணை-2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - நினக்குத் தருவேன்' என்றனன். நீயோ, தும்போன்ற சால்புடையவர்கள் தம் வாக்கைப் பொய்யாதவர் ஆதலினல், இத்தகைய சூளுரைகளைச் சொல்ல மாட்டார்கள்' என்று கூறினை. பின்பொரு காலத்திலே, அவன், நம் தமர்களைப் பணிந்தவகை, நம்முடைய மலையகத்து விளங்கிய சிறு குடி யானது அழகடையுமாறு, வதுவை அயர்தும்' என்று அந்தணர் சான்ருேரை முன்னிட்டு வந்த பொழுதிலே, அவன் உண்மைப் பண்பை அறிந்தேளுகிய யானும், நின் அறிவு நுட்பத்தை வியந்தேன் அல்லேனே! கருத்து அத்தகைய நின் தலைவனை நீதான் வெறுத்து ஒதுக்குதல் முறையன்று' என்பதாம். . . ; - சொற்பொருள் : ஒருத்தல் - தலைண்மயுடைய ஆண் பன்றி. துறுகட் கண்ணி - கள் நிரம்பிய தலைக்கண்ணி. உழுது - உழுது விளைத்த. குலவுக்குரல் - வளைந்து தலைசாய்ந்திருக்கும் முற்றிய தினைக்கதிர். மாந்தி - நிறையத் தின்றுவிட்டு. ஞாங்கர் - அடுத் துள்ள பக்கத்திடத்தே. அருஞ்சூள் - பொய்த்தற்கரிய சூளுரை. அணங்குடை - அணங்குதலை உடைய, அணங்குதல் தெய்வம் சாற்றிச் சொல்லும் சூளுரை பொய்ப்பின் அத் தெய்வம் பொய்த்தானைத் தாக்கி வருத்துதல். துன்னர். சொல்லார். பொலிய- அழகு கொள்ள. வதுவை - திருமணம். உள்ளுறை : பன்றியின் ஒருத்தல், கானவர் விளைத்த தினைக் கதிரை நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே தங்கியிருக்கும் வேங்கைப் புலிக்கும் அச்சப்படாததாய், மூங்கிற் காட்டிலே கிடந்து உறங்கும் நாடன் என்றனள். இது தலைவனும் அவ்வாறே பரத்தையரின் அன்னையர் அறியாதே அவர்தம் இன்பத்தை நுகர்ந்து களித்து மயங்கியவய்ை, அண்டை அயலிலுள்ளவர் பழித்துப் பேசுவதற்கும். அச்சப்படாதவளுக வந்து, மனைவி வீட்டின் முற்றத்திலே காத்து நிற்கின்றனன் என்றதாம். A& விளக்கம் : அன்று சூளுரைத்தல் வேண்டா: நின் சொல்லே போதும் என்று அவ்னிடமுள்ள பெருகிய காதலால் நீயுரைத்த சொற்கள், பின் அவன் வதுவை வேட்டு வந்தபோது மெய்யாயினதும் அறிந்து வியந்தேன். இப்போது, அவன் தவறு செய்துவிட்டு, அதுபற்றி அஞ்சாமல் வந்து வீட்டின்முன் நிற்கின்ருன். அவனைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளாமல் நீதான் சினந்து ஒதுக்குகின்றன. நின் குறிப்பை என்னுற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/389&oldid=774548" இலிருந்து மீள்விக்கப்பட்டது