பக்கம்:நற்றிணை-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sss நற்றிணை தெளிவுரை புரிந்துகொள்ள முடியவில்லை; நீதான் அறிவுள்ளவளாதலின் ஏற்றது ஆராய்ந்து செய்க என்று தோழி உணர்த்துவதாக கொள்க. * - பயன்: இதல்ை, தன் சின்ம் தணியும் தலைவி, தலைவன ஏற்றுக் கொள்வாள் என்பதாம். - 387. உறைகழி வாளின் மின்னி1 பாடியவர்: பொதும்பில் கிழார் மகளுர், திண : பால. துறை: பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது. - . (து-வி.) தலைமகன், வருவதாகக் குறித்த காலத்தின் வரவிலும் வாராதானகத், தலைவியின் வருத்தம் கனன்று பெரி தாகின்றது. அப்போது தோழி, எதிர்ப்படும் பருவவரவைக் காட்டி, அவன் சொற்பிழையாது திரும்புவான் எனக் கூறித், தலவியின் கவலைய்ைத் திணிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.) நெறியிருங் கதுப்பும் ண்ேட தோளும் அம்ம! நாளும் தொன்னலஞ் சிதைய ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன்னருங் கவல அருஞ்சுரம் இறந்தோர் 5 வருவர் வாழி-தோழி! செருவிறந்து ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தானைச் செழியன் பாசறை உறைகழி வாளின் மின்னி, உதுக்கான், நெடும்பெருங்குன்றம் முற்றிக் - 10 கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே! - தெளிவுரை: தோழி! வாழ்வாயாக. இதனையும் கேட் பாயாக.போர்க்களத்தே புகையழித்து வென்று. ஆலங்கானம் என்னுமிடத்திலே, களத்தில் எதிராத பிறரும் அஞ்சி நடுங்கு மாறு பாசறையிலே வீற்றிருந்தான், வேல்வீரர் நிரம்பிய படை யினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன். அவனது பாசறை யிடத்தே உள்ளவர் உறையினின்றும் உருவியெடுத்த வாளைப் போல மின்னலிட்டபடியே, அதேர். பாராய், நெடிய பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/390&oldid=774552" இலிருந்து மீள்விக்கப்பட்டது