பக்கம்:நற்றிணை-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 - ாக தெளிவுரை பயன் : இதல்ை தலைமகள் தன் துயரம் சிறுகக் குறைந்து அவன் வரவை ஆவலோடு எதிர்நோக்குபவளாக மகிழ்வாள் என்பதாம். பாடபேதங்கள் : தொன்னலம் சிதையேல்; ஒராச் செந் தொடை. 388. அகல்வு அறியான்! பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகளுர் பெருங் கண்ணனர். திணை : நெய்தல். துறை (1) வரைவுநீட ஆற்ரு ளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது; (2) மனையுள் வேறுப்டாது ஆற்றினய் என்ருற்குத் தலைமகள் சொல்லியதுTஉம் ஆம். - ((து. வி.) தலைமகன் வரைபொருள் குறித்துச் சென்றவன் குறித்த காலத்து வராது, காலம் நீட்டித்தலாலே தலைவியும் மனம் கலங்குகின்றனள். அவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்து, தோழி, அவன் செயலை ஐயுற்ருள் போலக் கூறுகின்ருள். அவளுக்குத் தான் அவன்பாற் கொண்டுள்ள நம்பிக்கையைத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) வீட்டிலிருந்தபோது எழில் வேறுபாடு தோன்ருமல் பிரிவுத் துயரை அடக்கிக் காத்தாய்' என்று தோழி பாராட்டிய போது, அதற்குத் தலைவி பதில் சொல்வதாகவும் இதனைப் பொருத்திக் கொள்ளலாம்.) அம்ம வாழி தோழி!-கன்னுதற்கு யாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக் கயிறுடை யாத்த கடுநடை எறிஉளித் திண்திமிற் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி வைகறைக் 6 கடல்மீன் தந்து கானற் குவைஇ ஓங்கிரும் புன்னை வரிகிழல் இருந்து, தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன், எம் சிறியநெஞ்சத்து அகல்வறி யானே! - 10 தெளிவுரை : தோழி, வாழ்வாயாக யான் சொல்வதனையும் கேட்யாயாக. கடலிலே வின்ரயச் செல்லக்கூடிய திண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/392&oldid=774556" இலிருந்து மீள்விக்கப்பட்டது