பக்கம்:நற்றிணை-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 நற்றின தெவுரை விளக்கம் : தந்தையும் பிறரும் விலங்குகளைத் தொடர்ந்து சென்றவர் விரையத் திரும்புதல் கூடுமாதலால், அவர் தலைவனைக் காணின் அவனுக்கும் தலைவிக்கும் ஊறு நேரும் என்று சுட்டிப் பகற்குறி மறுத்ததாகக் கொள்க. தினை கொய்யும் காலமும் வந்தது, வேங்கையும் மலர்ந்தது என்றது. மணவின்ைபற்றி இனித் தாயும் தமரும் விரைந்து ஏற்பாடு செய்தல் நேரும் என்று அறிவித்ததாம். ஆகவே, இற்செறிப்பு நிகழும் என்பதும், தலைவன் வரையாது தாழ்த்தலால் தலைவிக்கு உண்டாகும் வேதனை தலைவனுக்குப் புலனுகும் என்பதும் இதல்ை அறியப்படுவதாம். வேங்கைப் பூவைப் புலி யென்றது, அது தன் தாயின் உள்ளத்திலே மணவினை நினைவை உண்டாக்கி, தன்னையும் தலைவனையும் உறவாடாத நிலைக்கு இற்சிறை வைக்கத் தூண்டிய கொடுமைக்குக் காரணமாதலால் என்றும் கொள்க. - பயன்: தலைவன் வரைபொருளோடு சான் ருே ரை முன்னிட்டு வந்து மணம் வேட்டுத் தலைவியை முறைப்படி மணந்து கொள்வான் என்பதாம். - 390. தொல்யு பலவே பாடியவர் : ஒளவையார். திணை : மருதம். துறை : (1) பாங்காயின் வாயில் கேட்ப நெருங்கிச் சொல்லியது: (2) தலைமகள் தோழிக்கு உரைப்பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்பச் சொல்லியது.உம், ஆம். ((து. வி.) (1) தலைவன் மனம் விழாக்களத்திலே ஆடும் மற்ருெருத்திபாற் செல்லுமோ என்று அஞ்சுகின்ருள் அவன் காதலி, ஆகவே, தன்னைப் புனைந்துகொண்டு எழிலோடு வந்து அவனைத் தானே கைப்பற்றிச் செல்வதாக, அந்தப் புதிய, வளின் ஏவற்பெண்டுகள் கேட்குமாறு, வெகுண்டு கூறுவத்ாக அமைந்த செய்யுள் இது, (2) பரத்தையுறவு உடைய்ான் தலைவன் என்று ஊடியிருந்த தலைவி, அவ்ன் மீண்டும் அவளை நாடி வருவதை விரும்பியவளாக, அவன் ஏவலர் கேட்குமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவெனவும், கொள்ளலாம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/396&oldid=774564" இலிருந்து மீள்விக்கப்பட்டது