பக்கம்:நற்றிணை-2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 393 வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ விழவிற் செலீஇயர் வேண்டும் மன்ளுே; யாணர் ஊரன் காணுகன் ஆயின், வரையா மையோஅரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையும் கற்ருேள் 10 அளிய-தோழி!-தொலையுரு பலவே. தெளிவுரை : தோழி! வாளை மீன்கள் பொய்கையிலே வாளைப் போல ஒளிவீசியபடியே பிறழும். நாள்தோறும் பொய்கையிலேயே உள்ளதான நீர்நாயோ அதனைப் பாராட்டாது தங்கிய துயிலை ஏற்று உறங்கியபடி இருக்கும். கைவண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்துள்ள வயல்களிலேயுள்ள, வெள்ளை ஆம்பலின் அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக்கொண்டு, யானும் விழாக்களத் திற்குச் சென்றுதான் ஆகவேண்டுமோ? அவ்வாறு யான் செல்ல, புதுவருவாய்களையுடைய ஊரன் என்னையும் காண் யான் ஆயின், என்னை வரைந்து கொள்ளாமற் போவதோ அப்போது அரிதாகுமே! அப்படி என்னையே அவன் வரை வானுயின், மலைபோலத் தோன்றும் யானைகளையும், வாய்மை யையும் கொண்ட முடியனது, மலையிடத்துள்ள மூங்கிலைப் போன்று விளங்கும் பிறமாதரின் நல்ல தோள்கள் பலவும், தம் அழகினை இழப்பனவாகுமே! அவைதாம் இரங்கத்தன! கருத்து யான் அவ்வாறு போகேன் என்று தன் தகுதி தோன்றக் கூறியதாம். - சொற்பொருள் : வாளை - வாளை மீன். வைகு துயில் - தங்கும் துயில்: நெடுந்துயில். கைவண் கிள்ளி - கைவண்மை யுடைய கிள்ளிவளவன். உருவ - நிறமுள்ள; அழகிய நெறி - நெறிப்பமைந்த. ஐது - மெல்லிதாக. தைஇ- உடுத்து. வாய் மொழி - சொன்ன சொல் பிறழாத வாய்மை. முடியன் - ஒரு மலைநாட்டுச் சிற்றுார்த் தலைவன். அளிய - இரங்கத் தக்கன. நடி-85 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/397&oldid=774566" இலிருந்து மீள்விக்கப்பட்டது