பக்கம்:நற்றிணை-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நற்றிணை தெளிவுரை உள்ளுறை: பொய்கையிலே வாளைமீன் பிறழவும், அதனைப் பற்றி உண்பதில் மனஞ் செலுத்தாது, பொய்கை நீர் நாய் துயிலேற்கும் என்றனள். விழாக் களத்திலே ஆடுகின்ற பரத்தையர் மகளிர் எத்துணைதான் தலைவனை மயக்கி, அவன் தம்மைக் கொள்ளுமாறு தூண்டினலும், அவன்தான் அவர் செயலைப் பாராட்டாதே தன்னை நாடி வந்து சேர்வான் என்றதாம். அவர்தாம் தம் கருத்து நிறைவேருமற் சோர்வார் என்பவள் நற்ருேள் அளிய தெர்லையுந பலவே' என்றனள். - விளக்கம் : செலீஇயர் வேண்டும் மன்னே' என்பதைச் செல்ல வேண்டும், சென்ருல் அவன் பிறர்பாற் செல்லான் எனவும் சொல்லலாம். செல்லவும் வேண்டுமோ எனின், அவன் வாள்ை பிறழக் கவலையுருது துயிலும் நீர்நாய் போல, அவர் எத்துணைதான் ஆடியாடித் தம் அழகைக் காட்டினும், அவர்பால் மனம்போக விடான் என்று கூறியதாகும். பயன் . இதனைக் கேட்கும் வாயிலோர் தலைவியின் சிறப்பை உணர்ந்து போற்றுவர் என்பதும், தலைவன் அதனை யுணர்ந்தாளுய் அவள்பால் திரும்புவான் என்பதும் கொள்க. 391. அழுங்குவர் செலவே! பாடியவர் : பாலைபாடிய பெருங் கடுங்கோ, திணை : பாலை. துறை : (1) பிரிவு உணர்த்தப்பட்டு- ஆற்ருளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; (2) வரைவு உணர்த்தியது மாம். ((து-வி.) (1) தலைவன் பிரிந்து போவதாகச் சொல்லவும். கேட்ட தோழியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தோழி அவட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது: (2 தலைமகன் வரைவொடு வருதற்பொருட்டாகப் பொருள்தேடி விரைவில் வருவான் என்று கூறித் தோழி தலைவியைத் தெளிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.) ஆழல் மடந்தை! அழுங்குவர் செலவேபுலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும்பில் பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/398&oldid=774568" இலிருந்து மீள்விக்கப்பட்டது