பக்கம்:நற்றிணை-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 3, ... - நற்றிணை தெளிவுரை 212 வந்தனர் வாழி தோழி! பாடியவர் : குடவாயிற் கீரத்தனர். திணை : பால். துறை : பொருள் முடித்துத் தலைமகனேடு வந்த வாயில் கள்வாய் வரவுகேட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது. ((து-வி.) பொருள் முடித்த தலைவன், தான் மீண்டுவரு கின்றத்ான செய்தியைத் தலைவிக்கு முன்னதாகத் தெரிவிப் பதற்காகத், தன் ர்வலருட் சிலரை அவள்பால் அனுப்பு கின்ருன். அவர்கள் செய்தி சொல்லக் கேட்ட தோழி யானவள், தலைவியிடஞ் சென்று, அவளை வாழ்த்துவது போன்று அமைந்த செய்யுள் இது.) பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் 5 நெடும்பெருங் குன்றம் நீந்தி, நம்வயின் வந்தனர்; வாழி தோழி! கையதை செம்பொன் கழல்தொடி நோக்கி, மாமகன் கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் அவவுக்கொள் மனத்தேம் ஆகிய எமக்கே! 10 தெளிவுரை : தோழி! நீதான், இனிமேலும் நெடுங்காலம் இனிதாக வாழ்வாயாக! பறவைகளைப் பற்றக் கருதிய வேட்டுவன், பார்வைப்புள்ளை வைத்து அமைத்த வலையைக் கண்டதும், நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை யானது அச்சங் கொள்ளும். தான், தன் துணையை அழைத்துப் புலம்புதலையும் செய்யும்! அதன் தெளிவான விளிக்குரலானது, சுரத்தின் வழியாகச் செல்கின்றவரான கூத்தாடுவோர், தம் நடை வருத்தம் தோன்ருமற்படிக்கு விரைவாக இசைக்கின்ற யாழின் இசையோடும் மாறு கொண்டதாய் இருக்கும். அத்தகைய காட்டு நெறியின் அவ்விடத்தே, கடுங்குரற் பம்பையினைக் கொண்டாராகவும், சினங்கொண்ட நாயுடன் கூடியவராகவும் வடுகர் வருவர். அத்தகையதான, நெடிதும் பெரிதுமான குன்றத்தையும் கடந்து, நம் தலைவரும், நம் ஊருக்கு மிக அணித்தாகவே வந்து கொண்டிருக்கின்றனர். நம் கையிடத்தே விளங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/40&oldid=774574" இலிருந்து மீள்விக்கப்பட்டது