பக்கம்:நற்றிணை-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 397 கடுஞ்சுரு எறிந்த கொடுந்தாள் தந்தை புள்ளிமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென மனயழுது ஒழிந்த புன்தலைச் சிருஅர் துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் பணகோள் வெம்முலை பாடுபெற்று உவக்கும் 5 பெண்ணை வேலி உழைகண் சீறுர் நன்மன அறியின் நன்றுமற் றில்ல செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த கானலோடு அழியுநர் போலாம் பால்நாள் முனியடர் களையினும் களப கனிபேர் அன்பினர் காத லோரே! 10 தெளிவுரை கொடுமையான சுருமீனை எறிந்து கொன்று கைப்பற்றிய, கடுமையான முயற்சியையுடைய நம் தந்தை யானவன், கடற்பறவைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடலிலே, தம்மையும் உடன்கொண்டு போகாமற் சென்றன.கை, அதனல் மனையிடத்தேயிருந்து அழுதழுது வருந்தினர், மெல்லிய தலையை யுடையவரான அவன் சிறுவர்கள். அவர்கள், விரைவாக முயற்சியோடு கிடைத்த இனிய கண்ணையுடைய நுங்கின், ப்ணைத்தலைக் கொண்ட விருப்பம்வரும் கொங்கையின் பயனைப் பெற்று, அதனல், தம் மனம் உவப்படைந்தனர். பனைமரங்கள் வேலிபோல அமைந்த அகன்ற இடத்தையுடைய-அச் சிற்றுாரி லுள்ள நம்நல்ல மனையினை காதலரும் அறிந்தால் மிகவும் நன்றே அல்லவோ இரவின் நடுயாமத்திலே நம்மை வருத்தும் துன்பத்தை அவர் ப்ோக்கிலுைம் போக்குவர். நம்பால் மிகப் பெரிய அன்பையும் உடையவர். அவர்தாம், செம்மாப்புற்ற நெஞ்சத்தோடு, முன்பு தாம் வந்து நம்மையும் மகிழ்வித்துப் பிரிந்துபோன கானற் சோலையிடத்துக்கு வந்து நின்று, இப் போதும், நம்மை வரக்காணுதே நெஞ்சம் அழிகின்றனர் போலும்! கருத்து அவர்தாம் நம் மனையகத்துக்கு விருந்தாக வரின் நன்று என்பதாம் சொற்பொருள் கடுஞ்சுரு - கடுமையினையுடைய சுருமீன். எறிந்த எறி உளியால் எறிந்து வேட்டமாடிய கொடுந்தாள் கொடுமையான முயற்சி; கொடுமையாவது துடிக்கத் துடிக்கச் சுருவைக் கொல்வது. புள் கடற் புட்கள்: நீர்க் காக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/401&oldid=774578" இலிருந்து மீள்விக்கப்பட்டது